டாட்டா டொகோமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாட்டா டொகொமோ (ஆங்கிலம்:Tata Docomo) இந்தியாவில் நகர்பேசி சேவை வழங்கும் ஒரு இந்திய-சப்பானிய கூட்டு நிறுவனம் ஆகும்.2008 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இந்தியாவின் டாட்டா டெலி சர்விஸ் நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும் சப்பானின் என்.டி.டி டோகொமோ நிறுவனம் 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளன. இந்நிறுவனத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. டாட்டா டொகொமோ இந்தியாவில் 19 வட்டங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை சேவை வழங்குகிறது.

கட்டண விகிதம்[தொகு]

இந்தியா முழுவதும் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற கட்டண விகிதத்தில் வெற்றி பெற்ற முதல் நிறுவனம் டாட்டா டொகொமோ. முன்பு 2004ம் வருடம் லூப் மொபைலும் 2006ம் வருடம் டாட்டா இண்டிகாம் நிறுவனமும் இது போன்ற திட்டத்தை அறிவித்து அவை தோல்வியில் முடிந்தன.

வாடிக்கையளர் சேவை உதவி[தொகு]

இந்திய முழுமைக்கும் சேவை மைய எண்:121

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_டொகோமோ&oldid=2743699" இருந்து மீள்விக்கப்பட்டது