ராம் சரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம் சரண்
Ram Charan at Promotion of 'Zanjeer' on Jhalak Dikhhla Jaa.jpg
பிறப்புராம் சரண் தேஜ்
27 மார்ச்சு 1985 ( 1985 -03-27) (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இருப்பிடம்திரைப்பட நகர், ஹைதெராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–அறிமுகம்
உயரம்5 அடிகள் 9 அங்குலங்கள் (1.75 m)
பெற்றோர்சிரஞ்சீவி
சுரேகா
வாழ்க்கைத்
துணை
 • உபாசனா காமினேனி (2012–தற்போது வரை)
உறவினர்கள்அல்லு ராமா (தாய்வழி தாத்தா)
நாகேந்திர பாபு (தந்தை வழி மாமா)
பவன் கல்யாண் (தந்தை வழி மாமா)
ரேணு தேசாய் (அப்பா வழி அத்தை)
அல்லு அரவிந்த் (மாமா)
அல்லு அர்ஜுன் (cousin)

ராம் சரண் (பிறப்பு: மார்ச்சு 27, 1988) தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினிமா வாழ்க்கை[தொகு]

2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருது வென்றார். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு வெளியானது.

2009ம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை இராஜமௌலி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படம் ஆகும், மற்றும் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது.

மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010ம் ஆண்டு ஆரஞ்சு, 2012ம் ஆண்டு ரச்சா, 2013ம் ஆண்டு நாயக், 2014ம் ஆண்டு Yevadu போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் Zanjeer என்ற ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் Thoofan என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இவர் தற்பொழுது Govindudu Andarivadele என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு மொழி
2007 சிறுத்தை தெலுங்கு
2009 மாவீரன் தெலுங்கு
2010 ஆரஞ்சு தெலுங்கு
2012 ரச்சா தெலுங்கு
2013 நாயக் தெலுங்கு
2013 Zanjeer
Thoofan
ஹிந்தி
தெலுங்கு
2014 Yevadu தெலுங்கு
2014 Govindudu Andarivadele தெலுங்கு

விருதுகள்[தொகு]

நந்தி விருது
 • நந்தி சிறப்பு நடுவர் விருது சிறந்த நடிகர் - சிறுத்தை (2007)
 • நந்தி சிறப்பு நடுவர் விருது சிறந்த நடிகர் - மாவீரன் (2009)
பிலிம்பேர் விருதுகள்
வெற்றி
 • பிலிம்பேர் விருது சிறந்த புதுமுக நடிகர் - (சிறுத்தை) (2007)
 • பிலிம்பேர் விருது சிறந்த நடிகர் தெலுங்கு - மாவீரன் (2009)
பரிந்துரைகள்
 • பிலிம்பேர் விருது சிறந்த நடிகர் தெலுங்கு - ரச்சா (2012)
சினிமா விருதுகள் / CineMaa Awards
வெற்றி
 • சினிமா விருது சிறந்த புதுமுக நடிகர் - சிறுத்தை (2007)
 • சினிமா விருது சிறந்த நடிகர் - மாவீரன் (2009)
பரிந்துரைகள்
 • சினிமா விருது சிறந்த நடிகர் - ரச்சா (2012)
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
பரிந்துரைகள்
 1. http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=348&cat=1
 2. https://tamil.filmibeat.com/celebs/ram-charan-teja/biography.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சரண்&oldid=3291289" இருந்து மீள்விக்கப்பட்டது