தில்லி - சென்னை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லி - சென்னை வழித்தடம்
பொதுத் தகவல்
நிலை இயக்கத்தில்
வட்டாரம் தில்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம்,
இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம்
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு
முடிவிடங்கள் புதுதில்லி
சென்னை சென்ட்ரல்
இயக்கம்
திறக்கப்பட்டது 1929
உரிமையாளர் இந்திய இரயில்வே
இயக்குவோர் வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்னக இரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம் 2,182 km (1,356 mi)
தண்டவாளங்கள் 2
தண்டவாள அகலம் 1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்னிணைப்பு வசதி 25kV 50Hz AC OHLE 1980-1991களில்
வேகம் 160 km/hr வரை
வழி வரைபடம்

Grand Trunk Express and Tamil Nadu Express (NDLS-MAS) Route map.jpg


தில்லி- சென்னை வழித்தடம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சமவெளிகளின் தெற்குபகுதி , கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , தக்காண பீடபூமி மற்றும் யமுனா பள்ளத்தாக்குகள் வழியே தில்லியையும், சென்னையையும் இணைக்கும் ஒரு தொடருந்து பாதை ஆகும்

2,182 kilometres (1,356 mi) நீளம் கொண்ட இந்த வழித்தடம், தில்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் கிராண்ட் ட்ரங்க் விரைவுவண்டி இயங்குவதால், கிராண்ட் ட்ரங்க் வழித்தடம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கிராண்ட் ட்ரங்க் வழித்தடமானது பிரிவு அ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதன் வழியே செல்லும் தொடருந்து 160கி.மீ வரை வேகமாக செல்லமுடியும்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Chapter II – The Maintenance of Permanent Way". பார்த்த நாள் 17 March 2014.