உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய ரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய ரயில்வே
8-மத்திய ரயில்வே
கண்ணோட்டம்
தலைமையகம்சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை
செயல்பாட்டின் தேதிகள்1951–தற்சமயம்வரை
முந்தியவைகிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே, ஐந்தியா மாநில ரயில்வே, தோல்பூர் ரயில்வே & பிற
தொழில்நுட்பம்
மின்மயமாக்கல்உள்ளது

மத்திய ரயில்வே அல்லது மத்திய ரயில்வே மண்டலம் என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 17 மண்டலங்களில்[1] மிகப் பெரியது ஆகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி முனையமாகும் (முன்னர் விக்டோரியா முனையம்). இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இயங்கியது இந்த மண்டலத்தில் தான். மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு இடையே ஏப்ரல் 16, 1853 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 2003 ஏப்ரலில் இந்த மண்டலத்திலிருந்து மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டது.

இந்த மண்டலமானது மகாராட்டிரத்தின் பெரும்பகுதி, தெற்கு மத்தியப்பிரதேசம், வடகிழக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகளுக்கு சேவையை வழங்குகிறது. தற்போது இந்த மண்டலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,533,1007,1012
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_ரயில்வே&oldid=2938853" இலிருந்து மீள்விக்கப்பட்டது