உயிர்ப்பாதை விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்ப்பாதை விரைவுவண்டி அல்லது ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ்Lifeline Express or Jeevan Rekha Express)  என்பது இம்பாக்ட் இந்தியா அறக்கட்டளை நடத்தும் ஒரு தொடர்வண்டி மருத்துவமனை ஆகும். இது இம்பாக்ட் யுகே என்னும் சர்வதேச தொண்டு நிறுவனத்தால், இந்தியப் பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நிதியுதவியால் உருவாக்கப்பட்டு,  இந்திய இரயில்வே மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பால் வளர்க்கப்பட்டது. இது 1991 சூலை 16 இல் தொடங்கப்பட்டு, மும்பை விக்டோரியா தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 2010 ஆம் ஆண்டு வரை இதன் பணிகளினால் கிட்டத்தட்ட 120 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 600,000 கிராமப்புற இந்திய மக்களுக்கு உதவியுள்ளது.[1]

குறிக்கோள்[தொகு]

மருத்துவ வசதிகள் இல்லாத இந்திய குக்கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த நடமாடும் மருத்தவமனை தொடங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக நகரங்களுக்கு வந்து போக வாய்ப்பும் வசதியும் இல்லாத கிராம மக்களுக்கு தரமான பரிசோதனைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்ற பல மருத்துவ்வசதிகள்  இந்திய இரயில்வே வழியாக கிடைக்க இந்த தொடர்வண்டி மருத்துவமனை செயல்படுகிறது.[2] இந்த மருத்தவுமனையில் உலகத்தரமிக்க ஆய்வுக் கருவிகள், பரிசோதனை நிலையம், மருத்துர்கள் ஊழியர்கள் போன்றோர் தங்க இடம் போன்றவை உண்டு.

சேவைகள்[தொகு]

லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் பலவகையான மருத்துவ சேவைகளை வழங்குகிறது

 • எலும்புமுறிவு மருத்துவத்தில் எலும்பு முறிவு சீர்செய்தல், போலியோ போன்ற குறைபாடுகளுக்கு சிகிச்சை.
 • கண்மருத்துவம், எ.கா. கண் புரை நோய் அறுவைச் சிகிச்சை, கண்ணாடி வழங்குதல் போன்றவை.
 • செவிப்புல மருத்துவத்தில், கேட்கும் திறண் இழந்தவர்களுக்கு செவிப்புலனை மீட்டகும் அறுவைச் சிகிச்சை போன்றவை.
 • ஒட்டறுவைச் சிகிச்சையில் உதடுகளைச் சரிசெய்தல் போன்றவை.
 • கை கால் வலிப்பு  பற்றிய ஆலோசனை மற்றும் மருத்துவம் 
 • மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ வழிகாட்டல்.
 • நோய்த்தடுப்பு  மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள்.
 • ஊட்டச்சத்து மதிப்பீடு மற்றும் சேவைகள்.
 • கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதி மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துதல்

இந்த வண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கிறது, குறிப்பாக கிராமப் புறங்களுக்கும், நலவாழ்வு வசதிகள் குறைந்த பகுதிகளுக்கும், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றிற்கு செல்கிறது. மேலும் இது ஒவ்வொரு இடத்திலும் 21 முதல் 25 நாட்கள் தங்கி மருத்துவ வசதிகளை (சாதாரண மற்றும் முக்கிய அறுவை சிகிச்சை) உள்ளூர் மக்களுக்கு  அளிக்கிறது. இது தொடங்கப்பட்ட 1991 முதல் தற்போதுவரை இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Chatterjee P (May 2010). "Hospital train provides lifeline to rural India". Lancet 375 (9729): 1860–1. doi:10.1016/S0140-6736(10)60856-2. 
 2. Gaikwad, Rahi. "The Lifeline Express: 25 years of changing lives" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/mumbai/news/The-Lifeline-Express-25-years-of-changing-lives/article14493378.ece. பார்த்த நாள்: 2017-05-05. 

வெளி இணைப்புகள்[தொகு]