அறிவியல் விரைவுவண்டி
அறிவியல் விரைவுவண்டி (Science Express) என்பது இந்தியா முழுவதும் பயணிக்கும் அறிவியல் கண்காட்சிகளுடன் கூடிய தொடர்வண்டியாகும். இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று டெல்லி, சப்தர்சங் புகைவண்டி நிலையத்தில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொடங்கிவைக்கப்பட்டது. அனைவருக்கும் பொதுவாக இந்த கண்காட்சி அமைந்திருந்தாலும், இந்த திட்டம் மூலம் மாணவர்ளையும் ஆசிரியர்களையும் கருத்தில்கொண்டே அமைந்தது. 2017 வரை இந்த புகைவண்டி ஒன்பது பயணங்களை மூன்று கருப்பொருள்களில் கண்காட்சி அமைத்து பயணம் மேற்கொண்டுள்ளது. 2007 முதல் 2011 வரையிலான முதல் நான்கு பயணங்கள் "அறிவியல் விரைவுவண்டி" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இவை நுண் மற்றும் பெரும் பிரபஞ்சத்தில் கவனம் செலுத்தியது. 2012 முதல் 2014 வரையிலான அடுத்த மூன்று கட்டங்கள் ”பல்லுயிர் சிறப்பு" பயணமாக அமைந்தது. 2015 முதல் 2017 வரையிலான எட்டாவது மற்றும் ஒன்பதாவது பயணம் "காலநிலை மாற்றம்" குறித்து கவனம் செலுத்தும் வகையில் அமைந்தது
ஒருங்கிணைப்பும் கண்காட்சியும்[தொகு]
இந்த திட்டம் 2007ஆம் ஆண்டில் புதுதில்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மையமாகக் கொண்டது இத்திட்டம் தீட்டப்பட்டது. நுண் மற்றும் பெரும் பிரபஞ்சத்தினை மையப்படுத்தி முதல் நான்கு பயணங்கள் அமைந்தன. உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்ட ஆராய்ச்சிகளின் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டன. இது பெரு வெடிப்புக் கோட்பாடு, வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள், மரபணுக்கள், உணர்வு மற்றும் பிரபஞ்சம் போன்ற தலைப்புகளில் காட்சிப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.[1]
இரண்டாவது கருத்துருவானது இந்தியாவின் பல்லுயிர் வளத்தினை மையமாகக் கொண்டது. இது இந்திய அறிவியல் தொழினுட்ப துறையுடன் இந்தியச் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து வடிவமைத்தது. இது டிரான்ஸ்-இமயமலை மற்றும் இமயமலைப் பகுதிகள், கங்கை சமவெளி, வட கிழக்கு மலைப்பகுதிகள், பாலைவனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர கடற்கரைகள், தக்காணப் பீடபூமி மற்றும் பல்வேறு தீவுகளில் உயிரிகளின் பல்வேறு பண்புகளை உள்ளடக்கியது. புதிர்கள் மற்றும் அறிவியல் தொடர்பான விளையாட்டுகள் போன்ற வேடிக்கையான செயல்களுக்காக "குழந்தைப் பகுதி" இந்தப் பயணத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. [2]
இந்த புகைவண்டியின் மூன்றாவது பயணத்தின் கருப்பொருளாக ”காலநிலை மாற்றம்” அமைந்தது. இதற்கு ஏற்ப காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. இம்முறை அறிவியல் தொழில் நுட்பத் துறையுடன், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், உயிர் தொழில்நுட்பவியல் துறை, இந்திய இரயில்வே அமைச்சகம், விக்ரம் ஏ சாராபாய் சமூக அறிவியல் மையம், இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து காட்சிகள் அமைத்தன. கண்காட்சியின் ஒன்பதாவது புகைவண்டி பயணத்தில் 16 புகைவண்டி காட்சிப் பெட்டிகள் இருந்தன. இதில் எட்டு காட்சிப் பெட்டிகள் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது.[3] சில பெட்டிகளின் கூரையில் சூரிய சக்தி கலன்கள் நிறுவப்பட்டன. கண்காட்சியினை காணவரும் மாணவர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்களும் ஆசிரியர்களும் புகைவண்டியுடன் பயணம் செய்தனர். [4] முழு கண்காட்சியையும் நிர்வகிக்க விக்ரம் ஏ சாராபாய் சமூக அறிவியல் மையத்தினைச் சார்ந்த குழுவினர் கண்காட்சியினை காண வருகைதந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டனர். மேலும் புகைவண்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடங்களில் உள்ள இரயில்வே மேடையில் அறிவியல் குறித்த ஆர்வத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.[5] "அறிவியலை மக்கள் இயக்கமாக மாற்றுவதும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்குவிப்பதும்" இந்த கண்காட்சியின் நோக்கமாகும் என்று விக்ரம் ஏ சாராபாய் சமூக அறிவியல் மைய நிர்வாக இயக்குநர் திலீப் சர்க்கார் தெரிவித்தார். [6]
கண்காட்சி அதன் எட்டாவது கட்டத்தில் 142,000 கிலோமீட்டர்கள் (88,000 mi) பயணித்தது. இது 455 முக்கிய இரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இங்கு சுமார் 1,600 நாட்களில், 1.5 கோடி (15 மில்லியன்) மக்களும் 33,800க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இக்கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர்.[4] இந்த கண்காட்சி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.[3] [7]
புள்ளிவிவரம்[தொகு]
கருதுபொருள் | கட்டம் | காலம் | பயண தூரம் | தங்கல் | Ref. |
---|---|---|---|---|---|
அறிவியல் எக்ஸ்பிரஸ் | 1 | 30 அக் 2007 – 4 சூன் 2008 | 15,000 கிலோமீட்டர்கள் (9,300 mi) | 57 | [8] |
2 | 30 நவம்பர் 2008 – 30 மே 2009 | 17,000 கிலோமீட்டர்கள் (11,000 mi) | 51 | [8][9][10] | |
3 | 02 அக்டோபர் 2009 – 27 ஏப்ரல் 2010 | 18,000 கிலோமீட்டர்கள் (11,000 mi) | 56 | [8][11][12] | |
4 | 04 திசம்பர் 2010 – 16 சூன் 2011 | 18,000 கிலோமீட்டர்கள் (11,000 mi) | 57 | [8][13] | |
பல்லுயிர் சிறப்பு | 5 | 5 சூன் 2012 – 13 சனவரி 2013 | 18,000 கிலோமீட்டர்கள் (11,000 mi) | 52 | [8][14] |
6 | 9 ஏப்ரல் 2013 – 28 அக்டோபர் 2013 | 19,000 கிலோமீட்டர்கள் (12,000 mi) | 62 | [8][15] | |
7 | 28 சூலை 2014 – 06 பிப்ரவரி 2015 | 17,000 கிலோமீட்டர்கள் (11,000 mi) | 56 | [8][16] | |
பருவநிலை மாற்றம் | 8 | 15 அக்டோபர் 2015 – 07 மே 2016 | 19,800 கிலோமீட்டர்கள் (12,300 mi) | 64 | [8][1] |
9 | 17 பிப்ரவரி 2017 – 8 செப்டம்பர் 2017 | 19,000 கிலோமீட்டர்கள் (12,000 mi) | 74 | [1][17] |
கேலரி[தொகு]
- Science Express
ஒடிசாவின் ராயகடாவில் 2011இல் அறிவியல் விரைவுவண்டி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Science Express Climate Action Special". ScienceExpress.in. 2017. 23 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tiwari, Sudhir (9 April 2013). "Science Express: Biodiversity Special". Press Information Bureau. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Ninth Phase of Science Express to Criss-Cross India till September this Year Curtain Raiser". Press Information Bureau. 14 February 2017. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 "'Science Express Should Reach Out to more than Six Lakh Villages of The Country': Anil Madhav Dave". Press Information Bureau. 17 February 2017. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express: A School on Wheels is Coming to a Railway Station Near You". National Geographic Traveller. 22 February 2017. 27 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express to remain open for all today, tomorrow". The Times of India. 1 April 2017. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dedicated to climate-change, the Science Express flagged". Economic Times. 19 February 2017. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 "Tour Phase I-VIII". ScienceExpress.in. 7 May 2016. 23 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express 30 November 2008 to 30 May 2009". ScienceExpress.in. 2009. 8 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express II tour". ScienceExpress.in. 2009. 12 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express 2 October 2009 to 27 April 2010". ScienceExpress.in. 2009. 22 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express III tour". ScienceExpress.in. 2009. 6 ஜூலை 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Science Express: Shaping the Future" (PDF). ScienceExpress.in. 2010. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Science Express: Biodiversity Special" (PDF). ScienceExpress.in. 2012. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Science Express VI: Biodiversity Special" (PDF). ScienceExpress.in. 2013. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Science Express VII: Biodiversity Special" (PDF). ScienceExpress.in. 2013. 15 June 2017 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Route Map". ScienceExpress.in. 13 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2017-06-23 at the வந்தவழி இயந்திரம்