அந்த்யோதயா விரைவுவண்டி
Antyodaya Express | |
---|---|
கண்ணோட்டம் | |
நிகழ்நிலை | Operating |
முதல் சேவை | 4 மார்ச்சு 2017 |
நடத்துனர்(கள்) | Indian Railways |
வழி | |
இடைநிறுத்தங்கள் | 16 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | Unreserved General |
இருக்கை வசதி | Yes |
பொழுதுபோக்கு வசதிகள் | Electric outlets |
சுமைதாங்கி வசதிகள் | Underseat & Overhead racks |
மற்றைய வசதிகள் | Fire Extinguishers Purified water dispensers |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | LHB rakes |
பாதை | 5 ft 6 in (1,676 mm) broad gauge |
பாதை உரிமையாளர் | Indian Railways |
அந்த்யோதயா விரைவு வண்டி (ஏழைகள் விரைவு வண்டி) முற்றிலும் பதிவுசெய்யப்படாத பொதுப் பெட்டிகளை கொண்டதாகும். இது இந்திய ரயில்வே மூலம் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இந்த விரைவு வண்டி 2016 இந்திய இருப்புபாதை நிதியறிக்கையில் அதிக பயணிகள் நெருக்கடி கொண்ட பாதைகளில் 12 மணி நேரங்களுக்குள் இரண்டு நகரங்களை இணைக்க முன்மொழியப்பட்டது.
இதில் முற்றிலுமாக பொது பெட்டிகளே இணைக்கப்பட்டிருக்கும். இதில் எல்.இ.டி திரையில் தொடருந்து நிலையங்கள் மற்றும் விரைவு வண்டியின் வேகம் போன்றவை காட்சிப்படுத்தப்படும். மேலும் தேநீர், காபி மற்றும் பால் வழங்கும் இயந்திரங்களும், உயிரி கழிப்பறைகள் மற்றும் கழிப்பறை உபயோக குறிகாட்டிகள் இருக்கிறது. அத்துடன் சிசிடிவி கேமராக்கள், பருகக் குடிநீர் மற்றும் கைபேசி சார்ஜ் புள்ளிகள் அமையவிருக்கிறது. 'அந்த்யோதயா' என்ற இந்தி வார்த்தைக்கு தமிழாக்கம், 'ஏழைகளின் எழுச்சி' ஆகும்.
இந்தத் தொடரின் முதல் தலைமுறை 'ஜன் சதாரன்' விரைவுதொடருந்து என்ற பெயரில் இயக்கப்பட்டது. சில 'ஜன் சாதரன்' ரயில்கள் அந்த்யோத்யா விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. 'ஜன் சதாரன்' விரைவுதொடருந்து 2004 ஜனவரியில் இரயில் அமைச்சர் நிதிசுகுமாரினால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள்
[தொகு]- இந்த ரயில்களின் சிறப்பு அம்சம், முற்றிலும் பதிவுசெய்யப்படாத/பொது பயணிகள் பயணம் செய்யும் பெட்டிகள் கொண்டது
- கைபேசி, மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்த மின்விசை சேர்வி(Charing Port) உள்ளது .
- உயிரி கழிப்பறைகள் (Bio Toilets)
- வினைல் தாள்கள் கொண்டு பெட்டிகளின் வெளிப்புறத் தோற்றம் நீண்ட கால பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புகைப்பிடிப்பான் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அக்குவாகார்டு தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள், சட்டை தாங்கிகள் மற்றும் பிரெய்லி குறியீடுகள் தற்போதுள்ளது..
- LHB ரேக் பயன்படுத்தப்படுகிறது.
முதல் சேவை
[தொகு]முதல் அந்த்யோதயா விரைவு வண்டி சேவை மார்ச் 4, 2017 எறணாகுளச் சந்திப்புமற்றும் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவினால் தொடங்கி வைக்கப்பட்டது.
சேவைகள் பட்டியல்
[தொகு]இந்திய ரயில்வே பின்வரும் அந்த்யோதயா விரைவுவண்டி பட்டியல்களை வெளியீட்டுள்ளது.[2][3][4]
Train No | Name | Service frequency |
---|---|---|
15563/15564 | ஜெயநகர் - உத்னா அந்த்யோதயா விரைவுவண்டி | 1 |
22551/22552 | தார்பங்கா - ஜலந்தர் நகர அந்த்யோதயா வாராந்திர விரைவுவண்டி | 1 |
22841/22842 | சந்திராகாச் - சென்னை அந்த்யோதயா விரைவு வண்டி | 1 |
22877/22878 | ஹவுரா - எர்ணாகுளம் அந்த்யோதயா விரைவுவண்டி | 1 |
22885/22886 | லோக்மான்யா திலக் டெர்மினஸ் - டாட்டாநகர் அந்த்யோதயா விரைவுவண்டி | 2 |
22895/22896 | பிலாஸ்பூர் - பிரோஸ்பூர் நகரம் அந்த்யோதயா விரைவுவண்டி | 1 |
22921/22922 | பாந்த்ரா - கோடா அந்த்யோதயா விரைவுவண்டி | 1 |
16191/16192 | தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி [5] | தினசரி |
16189/16190 | தாம்பரம் - செங்கோட்டை அந்த்யோதயா விரைவுவண்டி | தினசரி |
16355/16356 | மங்களூர் சந்திப்பு - கொச்சுவேலி அந்த்யோதயா விரைவுவண்டி [6] | இரு வாரங்களுக்கு ஒருமுறை நிகழ்கிற |
20971/20972 | ஜெய்ப்பூர்- வாரணாசி அந்த்யோதயா விரைவுவண்டி | தினசரி |
குறிப்புகள்
[தொகு]- ↑ [1]
- ↑ Routes and Timetables of New Tejas, Uday, Humsafar and Antyodaya Trains
- ↑ Tejas, Hamsafar Express trains in railway's new timetable
- ↑ "Kerala gets two more trains - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/kerala-gets-two-more-trains/articleshow/61220494.cms. பார்த்த நாள்: 2017-10-28.
- ↑ http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=5782&id=0,4,268
- ↑ http://www.thehindu.com/news/cities/Mangalore/new-rly-timetable-brings-two-new-trains-to-city/article19916503.ece