சிலிகுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலிகுரி
—  நகரம்  —
சிலிகுரி
இருப்பிடம்: சிலிகுரி
, மேற்கு வங்காளம்
அமைவிடம் 26°43′N 88°26′E / 26.71°N 88.43°E / 26.71; 88.43ஆள்கூறுகள்: 26°43′N 88°26′E / 26.71°N 88.43°E / 26.71; 88.43
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் டார்ஜிலிங் மாவட்டம்
ஆளுநர் கேசரிநாத் திரிபாதி[1][2]
முதலமைச்சர் மம்தா பானர்ஜி[3]
நகரத்தந்தை கங்கோத்திரி தத்தா
மக்களவைத் தொகுதி சிலிகுரி
மக்களவை உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி சிலிகுரி, தாப்கிராம்-பூபாரி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

41.90 கிமீ2 (16 சதுர மைல்)

122 மீற்றர்கள் (400 ft)

இணையதளம் www.siligurismc.com


சிலிகுரி (வங்காள: শিলিগুড়ি, நேபாளி: सिलिगुडी) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். முதன்மை இந்திய நிலப்பகுதியை வட கிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி தாழ்வாரம் அல்லது கோழிக்கழுத்து எனப்படும் குறுகலான நிலப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் அண்மை நாடுகளான நேபாளம், பூடான் மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றிற்கு வான்வழி, சாலை மற்றும் தொடர்வண்டி போக்குவரத்துக்கான சந்திப்பாகவும் விளங்குகிறது. இக்காரணங்களால் மேற்கு வங்காளத்தின் முகனையான வணிக மையமாக விளங்குகிறது.

சிலிகுரி டார்ஜிலிங் மாவட்டத்தின் மிகப்பெரும் நகரமாக உள்ளது. சிலிகுரியின் தனித்துவமாக நகரின் 47 வார்டுகளில் 15 அண்மையிலுள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகருக்கான வானூர்தி நிலையம் பக்டோக்ரா வானூர்தி நிலையம் இந்திய வான்படையின் ஆட்சிப்பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிகுரி&oldid=1767905" இருந்து மீள்விக்கப்பட்டது