பொதுவுடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Hammer and sickle.svg

அரசியலிலும் சமூக விஞ்ஞானத்திலும் கம்யூனிசம் அல்லது பொதுவுடைமை (Communism; இலத்தீன்: communis)[1][2] என்பது சமூக, அரசியல், பொருளாதாரக் கருத்தியலும் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதற்கான இயக்கமும் ஆகும்.[3][4]

பொதுவுடமைச் சமூகத்தின் பண்புகள்[தொகு]

பொதுவுடமை சமூகத்தில்,

 • உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
 • எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
 • மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். அப்பங்கு பங்களிப்பின் அடைப்படையில் அமையாமல், எல்லோருக்கும் சமமாக இருக்கும்.
 • ஒரு பொருளாதார மற்றும் சமூக வளச்சி அடைந்த ஒரு நாட்டில் , அரசு உடமைகள் என்பவற்றை மக்களுக்க் பகிரந்து தர அமைக்கப்படும்
 • நாளடைவில் அதிகாரம் மக்களுக்கு பலமுனைப்படுத்தப்பட்டு அரசு முறை அழிக்கப்படும்.

கொள்கை நோக்கில் பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது என்றும், இந்த வளங்களைக் கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது என்றும் இக்கொள்கை உரைக்கின்றது.

பொதுவுடமைவாதி[தொகு]

பொதுவுடமைவாதி கற்கும் அறிவு அனைத்தும் மனத்துள் செரிமானம் செய்யப்படவில்லையானால்.. கருத்து மிக்க கடும் பயிற்சி இல்லாமலே, விமர்சனக்கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்துக் கொள்ளாமலேயே... தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளை ஒருவர் பண்டித பாணியில் ஏற்றுக்கொள்ளாதவர் பொதுவுடமைவாதி என்றும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பொதுவுடமைவாதிகள் என்றும் அறியப்படுகிறார்கள்.[5]

மார்க்சிய கொள்கை[தொகு]

காரல் மார்க்சு பொதுவுடைமைக் கொள்கைகளை வரையறுத்தவர்களில் முதன்மையானவர். அவரும் பிரெட்ரிக் ஏங்கல்சும் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை புகழ்பெற்றது.

முதன்மை கட்டுரை: பொதுவுடைமை அறிக்கை
கம்யூனிஸ்ட் அறிக்கை

பொதுவுடமைக் கட்சியின் அறிக்கை பெப்ரவரி 21, 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை ஆகும். பொதுவுடமைக் (கம்யூனிச) கோட்பாட்டாளர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்கின் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், சமவுடமை சமூகத்தினை உருவாக்குவதற்கும் பாட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்கை உலகில் கட்சி சார் அரசியலில் நடவடிக்கையில் மிக்க செல்வாக்குச் செலுத்துகின்றது.

'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.

விமர்சனங்கள்[தொகு]

மார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது.[6] ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.[7]

நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா.

பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது.[சான்று தேவை]

பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.[சான்று தேவை]

சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]

ஹொங்கொங் ஆட்சிப் பகுதியும் சீன பொதுவுடைமை கொள்கையும்[தொகு]

சீன பொதுவுடைமை ஆட்சி குறித்து ஹொங்கொங் சீன ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட கருத்துச்சித்திரம். நெற்றியில் நட்சத்திரமும், உலகை சரியானப் பார்வையில் பார்க்க முடியாமல் கறுப்பு கண்ணாடியணிந்த, கையில் கைக்குண்டுகளை தாங்கிய பன்றிகளாக பொதுவுடைமைவாதிகளை சித்தரிக்கும் கருத்துச் சித்திரம்

[சான்று தேவை]

ஹொங்கொங் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இருப்பினும் சீனாவின் பொதுவுடைமை கொள்கைகளுக்கு ஹொங்கொங் மக்களிடையே ஆதரவு இல்லை. பிரித்தானியர் வசம் திறந்தப் பொருளாதாரக் கொள்கையுடன் இருந்த ஹொங்கொங், 1997ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து சீனாவின் பொதுவுடைமை கொள்கைகளை ஏற்க விரும்பாத ஹொங்கொங் மக்கள் ஹொங்கொங்கை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பத்தினர். இதனால் சீனா "ஒரு நாடு இரு கொள்கை" எனும் உடன்படிக்கையை கைசாத்திட்டது. அதனைத் தொடர்ந்து சீனா தனது நீன பொதுவுடைமை கொள்கை கொண்டிருக்கும் அதே நேரம் ஹொங்கொங் திறந்த பொருளாதாரக் கொள்கையை கொண்டிருக்கலாம் என்பதும் நடைமுறைப் படுத்தப்பட்டது.[சான்று தேவை]

சீனாவில் பொதுவுடைமை மறுமலர்ச்சி தோன்றியப்போது சீனர்கள் எல்லோரும் அதனை ஆதரிக்கவில்லை. அதனால் பொதுவுடைமை ஆட்சி தோன்றும் போதே ஹொங்கொங், மக்காவு போன்ற பகுதிகளின் அன்மித்த குவாங்தோவ் மகாண மக்கள் ஹொங்கொங், மக்காவ் போன்ற நாடுகளில் இலட்சக் கணக்கில் தஞ்சம் புகுந்தனர். பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றும் போது வெறும் 7,000 மீனவர்கள் மட்டுமே இருந்த ஹொங்கொங் மக்கள் தொகை இன்று மில்லியன் கணக்கில் உயர்ந்ததே, சீனாவில் பொதுவுடைமை விரும்பாக, ஏற்காத மக்களின் ஹொங்கொங் வருகையின் பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சீன பொதுவுடைமைவாதிகள் ஹொங்கொங்கில் ஊடுருவியிருந்தப் போதும், இதுவரை ஹொங்கொங் சீன மக்களிடம் பொதுவுடைமை கொள்கைக்கு போதிய ஆதரவு இல்லை.[சான்று தேவை]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. "Communism". Britannica Encyclopedia. 
 2. World Book 2008, p. 890.
 3. Principles of Communism, Frederick Engels, 1847, Section 18. "Finally, when all capital, all production, all exchange have been brought together in the hands of the nation, private property will disappear of its own accord, money will become superfluous, and production will so expand and man so change that society will be able to slough off whatever of its old economic habits may remain."
 4. The ABC of Communism, Nikoli Bukharin, 1920, Section 20
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. Steger, Manfred B. The Quest for Evolutionary Socialism: Eduard Bernstein And Social Democracy. Cambridge, England, UK; New York, New York, USA: Cambridge University Press, 1997. pg. 236-237.
 7. Micheline R. Ishay. The History of Human Rights: From Ancient Times to the Globalization Era. Berkeley and Lose Angeles, California, USA: University of California Press, 2008. P. 148.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுவுடைமை&oldid=2158945" இருந்து மீள்விக்கப்பட்டது