அரசழிவு முதலாளித்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசழிவு முதலாளித்துவம் என்பது அரசுளைக் கலைப்பதையும், திறந்த சந்தையில் விரிவான தனிமனித சுதந்திரத்தையும் முன்வைக்கும் ஒரு அரசியல் கொள்கையாகும். இது சட்ட அமுலாக்கம், நீதி பரிபாலனம், மற்றும் அனைத்து சேவைகளும் தெரிவின் பேரில் நிதி பெற்று வழங்கப்படும் என்று கூறுகிறது. இது வரி மூலம் ஒரு அரசால் வழங்கப்படும் சேவைகளுக்கு மாற்றாக முன்வைக்கப்படுகிறது. அரசியல் இல்லாமல் தனியார் சட்டங்கள் (private law) மூலம் தனிநபர் மற்றும் பொருளாதார அலுவல்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் பாதிப்பாளர்கள் இல்லாத செயற்பாடுகள் குற்றம் அற்றதாக கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசழிவு_முதலாளித்துவம்&oldid=1828551" இலிருந்து மீள்விக்கப்பட்டது