லெனினிசம்
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
லெனினிசம் (Leninism) என்பது போல்ஷெவிக் புரட்சித் தலைவரான விளாடிமிர் லெனின் மற்றும் அவரது கொள்கைகளைக் பின்பற்றுபவர்களினாலும் தரப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளாகும். கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளான மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. இது சோவியத் கம்யூனிசத்துக்கு வழிவகுத்தது.
லெனினின் காலத்தில் "லெனினிசம்" என்ற கருத்து தெரிந்திருக்கவில்லை. லெனின் தனது கடைசிக் காலங்களில் சுகவீனமுற்று சோவியத் அரசில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தாத காலத்திலேயே லெனினிசம் பற்றிய கொள்கைகள் மற்றவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக அனைத்துலகக் கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் கிரிகோரி சினோவியெவ் என்பவரே "லெனினிசம்" என்ற கருத்தைப் பரப்பினார்.
சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதில் இருந்து லெனினிசம் என்பது மார்க்சியத்தின் ஒரு முக்கிய கிளாஇயாகப் பரவியிருந்தது. லெனினிசத்திலிருந்து நேரடியாகத் தோன்றியவைகளே ஸ்டாலினின் மார்க்சிசம்-லெனினிசம், மற்றும் லியோன் திரொட்ஸ்கியின் திரொட்ஸ்கியிசம் ஆகியன. லெனினின் மறைவிற்குப் பின்னர் சோவியத்தின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களாக ஸ்டாலினும் திரொட்ஸ்கியும் விளங்கினார்கள்.
வெளி இணைப்புகள்
[தொகு]லெனினின் நூல்கள்: