மாவோவியம்
Appearance
(மாவோயிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
மாவோயிசம் அல்லது மாவோவியம் (Maoism) அல்லது மா சேதுங்கின் சிந்தனை (Mao Zedong Thought) என்பது சீன அரசியல் தலைவர் மா சே துங்கின் (1893–1976) சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் அரசியல் கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். 1950கள்-60களில் உருவாக்கப்பட்ட இக்கொள்கை சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் மற்றும் இராணுவ சித்தாந்தங்களை வரையறுக்கும் ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமவுடமை சமூகத்துக்கான மாற்றத்தை உருவாகக்த் தேவையான புரட்சிப் படைக்கு உழைப்பாளர்களை விட வேளாண்மை சார்ந்த உழவரினமே தேவையானவர்கள் என மாவோயிசம் வலியுறுத்துகிறது.