பொதுவுடைமை அனைத்துலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதுவுடமை அனைத்துலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Hammer and sickle.svg
கம்யூனிச அகிலத்தின் தத்துவார்த்த இதழ் ஐரோப்பாவின் பல மொழிகளிலும் 1919 முதல் 1943 வரை வெளியிடப்பட்டது

பொதுவுடைமை அனைத்துலகம் (Communist International) அல்லது மூன்றாவது அனைத்துலகம் (Third International) என்பது 1919 ம் ஆண்டு மொசுகோவில் நிறுவப்பட்ட ஒர் அனைத்துலக பொதுவுடைமை அமைப்பு ஆகும்.

சமவுடைமைக் கோட்பாடு நாடுகள் மத்தியலான போர்களுக்கு எதிரானதாகவும் ஒர் அனைத்துலகப் பார்வையைக் கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் முதலாம் உலகப் போர் தொடங்கிய போது அந்த அந்த நாட்டு சமவுடைமை மற்றும் தொழிலாளர் கட்சிகள் அந்த அந்த நாட்டு அரசுகளையும் படைத்துறைகளையும் ஆதரித்தன. இது இரண்டாம் அனைத்துலகத்தின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தன. இதனால் இரண்டாம் அனைத்துலகம் செயலற்றுப் போனது.

முதலாம் கால கட்டம் (1919 - 1924)[தொகு]

லெனின் தலைமையில் பொதுவுடைமை அனைத்துலகம் உருசியப் புரட்சியை போன்று இதர மேற்குலக நாடுகளிலும், உலகளாவிய நோக்கிலும் நடத்தவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது.

இரண்டாவது கால கட்டம் (1924 - 1928)[தொகு]

லெனின் 1924 ம் ஆண்டு இறக்கிறார். உருசியப் புரட்சி போன்று இதர மேற்குநாடுகளில் நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இசுராலின் அதிகாரத்துக்கு வருகிறார். இவர் சோவியத் ஒன்றித்தில் மட்டும் பொதுவுடைமை என்ற கருத்தை முன்வைக்கிறார். அனைத்துலகப் பொதுவுடைமை என்ற நோக்கத்தில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு என்று நோக்கம் மாற்றம் பெறுகிறது.

மூன்றாவது கால கட்டம் (1928 - 1935)[தொகு]

முதலாம் கட்டத்தில் மேற்குலக நாட்டுப் புரட்சிகள் தோல்வி பெறுகின்றன. இரண்டாம் கட்டத்தில் அந்த நாட்டு முதலாளித்துவ சக்திகள் வலுப் பெறுகின்றன. ஆகவே மூன்றாம் கட்டம் தொழிலாளர் புரட்சிக்கான கட்டம் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் மிதவாத இடதுசாரிகள் முதன்மை எதிரிகளாக சில பொதுவுடமைக் கட்சிகளால் பார்க்கப்பட்டன. Popular Front கொள்கை 1935 இல் முன்வைக்கப்பட்ட பின்னர், மூன்றாவது காலம் முடிவுக்கு வந்தது.