காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில்

ஆள்கூறுகள்: 12°49′46″N 79°42′18″E / 12.8295°N 79.7049°E / 12.8295; 79.7049
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயில்
வழக்கறுத்தீசுவரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°49′46″N 79°42′18″E / 12.8295°N 79.7049°E / 12.8295; 79.7049
பெயர்
வேறு பெயர்(கள்):வழக்கறுத்தீசுவரர் மற்றும் பராசரேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவிடம்:காஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதி:காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:129 m (423 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வழக்கறுத்தீசுவரர்
தாயார்:மருகுவார் குழலி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆனி உத்திரம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

இக்கோயில் காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வர்.[1]

லிங்க திருமேனி[தொகு]

இக்கோயிலில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவலிங்கம் பதினாறு பட்டை கொண்ட லிங்க பானத்தை கொண்டுள்ளது.[2] இதன் தென்பகுதியில் பராசர ஈஸ்வர் என்ற லிங்க திருமேனி உள்ளது. இந்த லிங்கம் பராசர முனிவரால் வணங்கப்பட்டதாகும்.

திருவிழா[தொகு]

வருடம் தோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. வழக்கறுத்தீஸ்வரர் - மருகுவார் குழலி அம்பிகையுடன் தேரில் நான்கு ராஜ வீதிகள் வழியாக உலா வரும் சடங்குகள் நடைபெறுகிறது.

தலபுராணம்[தொகு]

சத், அசத் என்பதற்கான அர்த்தத்தை அறிந்துகொள்ள தேவர்களும், முனிவர்களும் காஞ்சிபுரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுடைய ஐயத்தை சிவபெருமானே நேரில் வந்து விளக்கியதால் இத்தலத்தில் சிவபெருமான் வழக்கறித்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. மலர், மாலை (4 பிப்., 2017). "காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 9-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "புராணப் பின்னணி கொண்ட வழக்கறுத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம்". Dinamani.
  3. Jayabalan, Suriyakumar. "வழக்குகளை தீர்க்கும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில்!". Tamil Hindustan Times.

வெளி இணைப்புகள்[தொகு]