சும்மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலையில் சுமை தூக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று வழங்குகிறது.


வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்மாடு&oldid=912422" இருந்து மீள்விக்கப்பட்டது