உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜமன்றி வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜமுந்திரி விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜமன்றி வானூர்தி நிலையம் அல்லது ராஜமுந்திரி விமான நிலையம் என்பது, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமன்றிக்கு அருகில் உள்ள மதுரபூடி என்ற இடத்தில் உள்ளது.[1] இந்த நிலையம் விரிவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடுதளப் பாதை 1,749 மீட்டர்களில் இருந்து 3,165 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கப்படும். இந்த திட்டத்திற்காக 857 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.[2]

விமான சேவைகள்

[தொகு]

இங்கிருந்து நாள்தோறும் எட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 400 பயணிகள் வந்து செல்கின்றனர். ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கிருந்து ஐதரபாத்துக்கு விமானங்களை இயக்குகின்றன.[2] இங்கிருந்து திருப்பதி, பெங்களூர், சென்னை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன.[1]

சான்றுகள்

[தொகு]