சேலம் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Salem Airport
சேலம் வானூர்தி நிலையம்

Salem Airport, Tamilnadu.jpg

IATA: SXVICAO: VOSM
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொதுமக்கள்
உரிமையாளர் இந்திய அரசு
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவது சேலம் மாவட்டம்
அமைவிடம் காமலாபுரம், ஓமலூர், சேலம்,தமிழ்நாடு இந்தியா
உயரம் AMSL 1008 அடி / 307 மீ
ஆள்கூறுகள் 11°46′55″N 078°03′52″E / 11.78194°N 78.06444°E / 11.78194; 78.06444ஆள்கூறுகள்: 11°46′55″N 078°03′52″E / 11.78194°N 78.06444°E / 11.78194; 78.06444
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
04/22 5,925 1,806 Asphalt
Source: DAFIF[1]

சேலம் விமான நிலையம் ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Airport of Salem.jpg

கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.

இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியது. சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் தொடங்கியது. சென்னைசேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.

நிர்வாக காரணங்களால் இந்த சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் சென்னை - சேலம் விமான சேவை விரைவில் தொடங்க உள்ளது.[2]

தற்பொழுது கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் சென்னையிலிருந்து சேலம் மற்றும் சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை உள்ளது.[1]

விரைவில் சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு ஏர் ஒடிசா தனது சேவையை தொடங்க உள்ளது.

போக்குவரத்து[தொகு]

  • இந்நிலையம் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் எளிதில் பேருந்து மற்றும் கார் மூலம் சேலம் விமான நிலையத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. [2]
    • 1 A310-300

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ருஜெட் சென்னை

மேற்கோள்கள்[தொகு]

https://www.airodisha.com/eng/flight-schedule

https://www.dailythanthi.com/News/State/2018/03/26022914/Between-Salem-and-Chennai-Flight-service-back.vpf