கோரக்பூர் வானூர்தி நிலையம்
கோரக்பூர் வானூர்தி நிலையம் Gorakhpur Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுவுடன் இணைந்த | ||||||||||
உரிமையாளர் | இந்திய வான்படை | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கோரக்பூர் | ||||||||||
அமைவிடம் | கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 79 m / 259 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 26°44′22″N 83°26′58″E / 26.73944°N 83.44944°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
கோரக்பூர் வானூர்தி நிலையம் (Gorakhpur Airport) (ஐஏடிஏ: GOP, ஐசிஏஓ: VEGK)என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் அமைந்துள்ள விமான நிலையமாகும். இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பொது விமானச் சேவையினை கோரக்பூர் இந்திய வான்படை நிலையத்திலிருந்து இயக்குகின்றது. நகரிலிருந்து இந்த வானூர்தி நிலையம் 5 மைல்கள் (8.0 km) தொலைவில் 0.71 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஜூன் 2017இல், பொது முனையக் கட்டிடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் திறந்து வைத்தார். இது கடத்தி பட்டையுடன் அடுத்த மாதங்களில் விரிவாக்கப்பட்டது.[1]
இராணுவ விமான நிலையம்
[தொகு]கோரக்பூர் விமானப்படை இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது. எண் 16 படை ஐ ஏ எப் இங்கிருந்து செயல்படுகிறது. இந்த படைப்பிரிவுகள் வழக்கமான இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன. இது தவிர மீட்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்கிறார்கள். எண் 101 உலங்கு வானூர்தி பிரிவு கோரக்பூர் ராணுவ விமான தளத்தில் அமைந்துள்ளது. செப்கேட் ஜாகுவார் விமானங்களும் கோரக்பூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு
[தொகு]கோரக்நாத் விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதை 11/29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் 2,743 by 46 மீட்டர்கள் (9,000 அடி × 150 அடி) ஆகும். தற்போதுள்ள முனையம் 200 பயணிகளை அதிகபட்சமாகக் கையாளக்கூடியது. 23,500 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.[2]
28 மார்ச் 2021 அன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், தற்போதுள்ள முனையக் கட்டடத்தை. ₹26.87 கோடிசெலவில் நிறுவப்பட்டதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இது 3440 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.[3] வருகை மண்டபத்தில் இரண்டு கடத்திப் பட்டைகள், 10 சோதனை-அறை, தானியங்கு ஏணி, நகரும் படிக்கட்டுகள், உணவகம் மற்றும் முதல் தளத்தில் கூடுதல் பாதுகாப்பு பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட முனையக் கட்டிடம் 200 பயணிகளை அதிகபட்சமாக நெரிசல் நேரங்களில் கையாள முடியும்.[4]
விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
அலையன்ஸ் ஏர் | தில்லி, இலக்னோ[5] |
இண்டிகோ | அலகாபாத், பெங்களூரு, தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை[6] |
ஸ்பைஸ் ஜெட் | அகமதாபாத்,[7] தில்லி, மும்பை[8] |
போக்குவரத்து
[தொகு]See source Wikidata query and sources.
புதிய கோரக்பூர் விமான நிலையம்
[தொகு]இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாடு, விரிவாக்கத்தில் உள்ள தடைகள் காரணமாக, கோரக்பூரின் விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரிப்பினை எதிர்கொள்ள வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் 300 ஏக்கரில் கோரக்பூருக்குப் பசுமை கள விமான நிலையம் முன்மொழியப்பட்டுள்ளது.[9]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Airport Website". Archived from the original on 25 February 2008.
- ↑ "Gorakhpur". Airports Authority of India. 10 September 2016. Archived from the original on 25 February 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
- ↑ "Adityanath lays foundation stone to extend terminal building at Gorakhpur airport" (in en-IN). The Hindu. 28 March 2021. https://www.thehindu.com/news/national/other-states/adityanath-lays-foundation-stone-to-extend-terminal-building-at-gorakhpur-airport/article34184971.ece.
- ↑ "Gorakhpur Airport terminal building all set for expansion. Details inside". ETNow. 30 March 2021. https://www.timesnownews.com/business-economy/industry/article/gorakhpur-airport-terminal-building-all-set-for-expansion-details-inside/738922.
- ↑ "Adityanath flags off new Gorakhpur-Lucknow flight service". Hindustan Times. 28 March 2021. https://www.hindustantimes.com/cities/lucknow-news/adityanath-flags-off-new-gorakhpur-lucknow-flight-service-101616933342096.html.
- ↑ "New Flights Information, Status & Schedule | IndiGo". www.goindigo.in.
- ↑ "GOP-AMD flight". பார்க்கப்பட்ட நாள் 19 March 2021.
- ↑ हिन्दुस्तान टीम (28 January 2019). "31 मार्च से मुंबई और 30 अप्रैल से कोलकाता-हैदराबाद की सीधी उड़ान". Live Hindustan (in இந்தி). Gorakhpur. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
- ↑ "New Gorakhpur Airport". Gorakhpur. 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.