குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம் குசிநகர், வடகிழக்கு உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL 266 ft / 81 m
ஆள்கூறுகள் 26°46′12″N 083°54′29″E / 26.77000°N 83.90806°E / 26.77000; 83.90806
நிலப்படம்
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் is located in உத்தரப் பிரதேசம்
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
உத்தரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
11/29 10,500 3,200 கருங்காரை (நீலக்கீழ்)

குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் (Kushinagar Airport or Kasia Airport)[1][2] இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள குசிநகரில் அமைந்துள்ள்து. இது கோரக்பூர் விமான நிலையத்திற்கு கிழக்கே 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[3] குசிநகர் நகர் விமான நிலையம் 590 ஏக்கர் பரப்பும்,[4] ஓடுதரை 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.[5]இது இந்திய-நேபாள எல்லை அருகே அமைந்துள்ளது.

20 அக்டோபர் 2021 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விமான நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக துவக்கி வைத்தார்.[6][7][8]

குசி நகரில் பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் மற்றும் இலங்கை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோருடன் வந்த இலங்கை விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது.

குசிநகர் அருகே புகழ்பெற்ற பௌத்த யாத்திரைத் தலங்களான சிராவஸ்தி (238 கிமீ), கபிலவஸ்து (190 கிமீ), வைசாலி 215 கிமீ, மற்றும் லும்பினி (195 கிமீ) தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kasia". Airports Authority of India. 25 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Civil Aviation Promotion Policy of Uttar Pradesh 2017" (PDF). Government of Uttar Pradesh. 14 பிப்ரவரி 2019 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kushinagar airport to be a boon for migrant labourers". The Times Of India, Shailvee Sharda, TNN 23 Feb 2013, 03.53AM IST. 2013-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-19 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. "Kushinagar airport takes global leap, puts Buddhist circuit on world map TNN". Jun 25, 2020.
  5. "Project Information Memorandum" (PDF). Government of Uttar Pradesh. 12 September 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Livemint (2021-10-20). "Kushinagar International Airport to be inaugurated today by PM Modi —10 points". mint (ஆங்கிலம்). 2021-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Air India decision will boost aviation sector: PM on Kushinagar airport inauguration". The Indian Express (ஆங்கிலம்). 2021-10-20. 2021-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  8. PM Modi to inaugurate Kushinagar International Airport