உள்ளடக்கத்துக்குச் செல்

அலாவுதீன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாவுதீன் கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்புca. 1862
சிப்பூர், நபிநகர், பிராமண்பேரியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 செப்டம்பர் 1972(1972-09-06) (அகவை 110)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைத்தொகுப்பாளர், சரோது கலைஞர்
இசைக்கருவி(கள்)செனாய், சரோது, சித்தார்

அலாவுதீன் கான், (Allauddin Khan) அல்லது பரவலாக பாபா அலாவுதீன் கான் (c. 1862 – 6 செப்டம்பர் 1972)[1] வங்காள சரோது இசைக் கலைஞர் ஆவார். சரோது தவிர பிற இசைக்கருவிகளையும் வாசிக்க கூடியவர். இசைத்தொகுப்பாளரும் கூட. இருபதாம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய இசை ஆசிரியர்களில் மிகப் புகழ்பெற்றவர்.[2][3][4]

1935இல், உதய் சங்கரின் நடனக் குழுவினருடன் ஐரோப்பா சென்றுள்ளார். அல்மோராவிலுள்ள உதய் சங்கர் இந்தியப் பண்பாட்டுக் கேந்திரத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.[5] தனது இசைவாழ்வில் பல இராகங்களைத் தொகுத்துள்ளார். தற்கால மைகார் கரானாவின் அடிப்படையை நிறுவினார். 1959-60 காலகட்டத்தில் அனைத்திந்திய வானொலி பதிவு செய்த இவரது இசை முக்கியமானதாகும்.[5]

சரோது வித்தகர் அலி அக்பர் கான் மற்றும் அன்னபூர்ணா தேவியின் தந்தை ஆவார். இராசா உசேன் கானின் மாமா ஆவார். இவரது முதன்மைச் சீடர்களாக ரவி சங்கர், நிக்கில் பானர்ச்சி, வசந்த் ராய், பன்னாலால் கோஷ், பகதூர் கான், ராபின் கோஷ், சரண் ராணி பாக்லீவால், ஜோதீன் பட்டாச்சார்யா, டபிள்யூ. டி. அமரதேவா இருந்தனர். கோபால் சந்திர பானர்ஜி, லோபோ, முன்னே கான் மற்றும் புகழ்பெற்ற வீணை கலைஞர், வாசீர் கான் போன்றோரிடம் இசை கற்றார்.[5]

1958இல் பத்ம பூசண் விருதும் 1971இல் பத்ம விபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[6] முன்னதாக 1954இல், சங்கீத நாடக அகாதமி இந்திய இசைத்துறைக்கு இவராற்றியப் பணிக்காக மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதை வழங்கியது.[7]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Clayton, Martin (2001). "Khan, Allauddin". The New Grove dictionary of music and musicians (2nd) 13. Ed. Sadie, Stanley. London: Macmillan Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-60800-3. “He is believed by some to have lived to the age of 110, although the conjectural birth date of 1881 is more likely” 
  2. Lavezzoli, Peter (2006). The Dawn of Indian Music in the West. A&C Black. pp. 67–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1815-9.
  3. Arnold, Alison, ed. (2000). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Taylor & Francis. pp. 203–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-4946-2.
  4. Broughton, Simon; Ellingham, Mark; McConnachie, James; Duane, Orla, eds. (2000). World Music: The Rough Guide. Vol. Volume 2: Latin and North America, Caribbean, India, Asia and Pacific. Rough Guides. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-636-0. {{cite book}}: |volume= has extra text (help)
  5. 5.0 5.1 5.2 Massey, Reginald; Massey, Jamila (1996). The Music of India. Abhinav Publications. pp. 142–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-332-9.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "List of Akademi Fellows பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்", SangeetNatak.gov.in.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதீன்_கான்&oldid=4043674" இலிருந்து மீள்விக்கப்பட்டது