அன்னபூர்ணா தேவி
அன்னபூர்ணா தேவி | |
---|---|
பிறப்பு | ரோசனாரா கான் 1927 மைஹார், மத்திய இந்தியா நிறுவனம், பிரித்தானியாவின் இந்தியா |
இறப்பு | 13 அக்டோபர் 2018 மும்பை, இந்தியா | (அகவை 90–91)
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | சுபேந்திர சங்கர் |
உறவினர்கள் | அலி அக்பர் கான் (சகோதரன்) |
அன்னபூர்ணா தேவி (Annapurna Devi) 1927 2018 அக்டோபர் 13 பிறந்த இந்துஸ்தானி இசைக் கருவியான சித்தார் இசைக் கலைஞர், மாஇஹார் எஸ்டேட்டின் முன்னாள் மகாராஜா "பிரிஜ்நாத் சிங் என்பவரால் இவருக்கு "அன்னபூரணி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இப்பெயர் பிரபலமாக அறியப்பட்டார். இவர் மைஹார் கரானாவின் நிறுவனர் அலாவுதீன் கானின் மகள் மற்றும் சீடர் ஆவார், மற்றும் சித்தார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் முதல் மனைவியாவார். ரவி சங்கரிடமிருந்து பிரிந்த பிறகு, அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அதன் பின்னர் பொதுவெளியில் ஒருபோதும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தவில்லை. அவர் ஒரு தனிப்பட்ட நபராக வாழ்ந்து வந்தார், மேலும், இலவசமாக இசையைக் கற்பிக்க ஆரம்பித்தார். அவரது மாணவர்களில் ஹரிபிரசாத் சௌரசியா, நித்தியானந்த ஹால்டிபூர் மற்றும் நிகில் பானர்ஜி உட்பட பல குறிப்பிடத்தக்க சீடர்கள் அடங்குவர்.[1]
சுயசரிதை
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் இருந்த (இப்போது இந்தியாவின் மத்தியப்பிரதேசம்) ஒரு சிறிய சுதேச அரசான மைஹாரில் 1927இல் அன்னபூர்ணா தேவி பிறந்தார். [2][3][a] இவருடைய அலாவுதீன் கான் மகாராஜா பிரிஜ்னாத் சிங்கின் அரசவையில் ஒரு இசைக் கலைஞராக இருந்தார்,[6] அன்னபூர்ணா தேவி புகழ் பெற்ற சித்தார் இசைக் கலைஞரான ரவி சங்கரை 1941 மே15 அன்று அல்மோராவில் திருமணம் செய்து கொண்டார். பிறகு, அக்டோபர் 1982 இல் அவரை விவாகரத்து செய்தார். [7] 1946 மற்றும் 1955 க்கு இடையில், டெல்லி மற்றும் பம்பாய் (இப்போது மும்பை ஆகியவற்றில் சித்தார்-சர்பாஹர் டூயட்கள் சிலவற்றில் அன்னபூர்ணா தேவி ரவிசங்கருடன் அரங்கத்தில் தோன்றினார். இவர்களுக்கு சுபேந்திர சங்கர் என்ற ஒரு மகன் உண்டு ,அவரும் ஒரு இசைக் கலைஞர் ஆவார். பின்னர், அன்னபூர்ணா ரோஷிகுமார் பாண்டியாவை டிசம்பர் 9, 1982 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தின் போது 42 வயதாக இருந்த ரோஷிகுமார் பாண்டியா, நன்கு அறியப்பட்ட தொடர்பு நிபுணர் மற்றும் அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான சித்தார் கலைஞர் ஆவார்.[8][9] அன்னபூர்ணா தேவி மும்பையில் 2018, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வயது முதிவினால் இறந்தார்.[10]
விருதுகள்
[தொகு]- 1977இல், அவர் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது பெற்றார்.[11]
- 1991இல், சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.
- 1999இல் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய டெசிக்கோட்டமா, என்ற ஒரு கெளரவ டாக்டர் பட்டம்
- 2004 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி விருது
குறிப்புகள்
[தொகு]- ↑ There appears to be considerable confusion on her exact date of birth. In her authorised biography, the author notes that the circumstantial references point to Annapurna being born on the "சித்திரை purnima day of the Bengali year of 1334 (1927)". But he finds no reliable accounts or documented evidence in support of this and chooses not to speculate.[3] Newspaper articles cited here choose to only mention her birth year. One source notes that she was born on 23 April 1927 but provides no basis for this.[4] According to the traditional Hindu calendar, Chaitra Purnima in 1927 fell on Sunday, 16 April 1927.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ram, Vinay Bharat (24 October 2018). "A transcendental music - what I learnt from Annapurna Devi". The Indian Express. https://indianexpress.com/article/opinion/columns/annapurna-devi-musician-death-5415098/. பார்த்த நாள்: 24 October 2018.
- ↑ OEMI.
- ↑ 3.0 3.1 Bondyopadhyay 2005, ப. 22.
- ↑ Lavezzoli 2006, ப. 52.
- ↑ "1927 Chaitra Purnima, Chaitra Pournami date for Ujjain, Madhya Pradesh, India". www.drikpanchang.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
- ↑ Shuansu Khurana (16 May 2010). "Notes from behind a locked door". Indian Express. http://archive.indianexpress.com/news/notes-from-behind-a-locked-door/619877/0.
- ↑ Bondyopadhyay 2005, Cast.
- ↑ https://timesofindia.indiatimes.com/city/kolkata/Every-Note-Annapurna-Devi-Plays-Is-Like-An-Offering-Rooshikumar-Pandya/articleshow/41890785.cms
- ↑ http://archive.indianexpress.com/news/death-of-a-caregiver/1108875/
- ↑ "Hindustani Classical Musician Annapurna Devi Passes Away At 91 - HeadLines Today". headlinestoday.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)
சான்றுகள்
[தொகு]- Bondyopadhyay, Swapan Kumar (2005). Annapurna Devi: An Unheard Melody (in ஆங்கிலம்). Roli Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174368553.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Annapūrṇā Devi, The Oxford Encyclopaedia of the Music of India (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195650983. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
{{cite book}}
: Unknown parameter|subscription=
ignored (help) - Dalal, Roshen (2017). India at 70: snapshots since Independenc (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789386815378.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Lavezzoli, Peter (2006). The Dawn of Indian Music in the West (in ஆங்கிலம்). A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780826418159.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Lindgren, Kristina (21 September 1992). "Shubho Shankar Dies After Long Illness at 50". Los Angeles Times. http://articles.latimes.com/1992-09-21/entertainment/ca-781_1_shubho-shankar. பார்த்த நாள்: 18 October 2018.
- ^ Unveiling the Mystique of a Reclusive Artiste பரணிடப்பட்டது 2009-05-31 at the வந்தவழி இயந்திரம், Jaya Ramanathan, தி இந்து, 28 June 2005.
- "Notes from behind a locked door (A rare interview)". Indian Express. 16 May 2010. http://www.indianexpress.com/news/notes-from-behind-a-locked-door/619877/0.
- "Raviji never left her". Times of India, Priyanka Dasgupta, 27 Aug 2008 இம் மூலத்தில் இருந்து 2013-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126045218/http://articles.timesofindia.indiatimes.com/2008-08-27/news-interviews/27948020_1_bhairavi-intensive-care-pandit-ravi-shankar.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Annapurna Devi and Ravi Shankar: The tragedy of a relationship". September 2000 issue of Man's World இம் மூலத்தில் இருந்து 16 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121216015655/http://mansworldindia.com/blog/?p=3030.
- Annapurna Devi's music, Source: The Vijaya Parrikar Library of Indian Classical Music
- Annapurna Devi by Mohan Nadkarni