குல்சாரிலால் நந்தா
Jump to navigation
Jump to search
குல்சாரிலால் நந்தா | |
---|---|
2வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் மே 27, 1964 – ஜூன் 9, 1964 | |
முன்னவர் | ஜவஹர்லால் நேரு |
பின்வந்தவர் | லால் பகதூர் சாஸ்திரி |
4வது இந்தியப் பிரதமர் (தற்காலிகமாக) | |
பதவியில் ஜனவரி 11, 1966 – ஜனவரி 24, 1966 | |
முன்னவர் | லால் பகதூர் சாஸ்திரி |
பின்வந்தவர் | இந்திரா காந்தி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஜூலை 4, 1898 சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்) |
இறப்பு | ஜனவரி 15, 1998 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
குல்சாரிலால் நந்தா (ஜூலை 4, 1898 - ஜனவரி 15, 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
நந்தா ஜீலை 4, 1898 ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
- இந்திய விருதுகளின் வார்ப்புருக்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் பிரதமர்கள்
- 1998 இறப்புகள்
- 1898 பிறப்புகள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- 1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
- 2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
- 3வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 4வது மக்களவை உறுப்பினர்கள்
- 5வது மக்களவை உறுப்பினர்கள்