மிருணாள் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மிருணாள் சென்
Mrinal Sen
பிறப்புமே 14, 1923 (1923-05-14) (அகவை 100)
ஃபரித்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதையவங்கதேசம்)
விருதுகள்மாஸ்கோ திரைப்பட விழா - வெள்ளிப் பரிசு
1975 சோருஸ்
1979 பரசுராம்
கர்லோவை வரை திரைப்பட விழா - சிறப்பு நடுவர் பரிசு
1977 ஒக்க ஓரி கதா
பெர்லின் திரைப்பட விழா - Interfilm Award
1979 பரசுராம்
1981 அகலிர் சந்தானி
பெர்லின் திரைப்பட விழா - Grand Jury Prize
1981 அக்கலிர் சந்தானி
கேன்ஸ் திரைப்பட விழா - நடுவர் பரிசு
1983 கரிஜ்
வல்லாடோலிட் திரைப்பட விழா - தங்க ஈட்டி
1983 கரிஜ்
சிக்காகோ திரைப்பட விழா - சிறந்த திரைப்படம்
1984 கண்டார்
மான்ட்ரியல் திரைப்பட விழா - சிறப்புப் பரிசு
1984 கண்டார்
வெனிஸ் திரைப்பட விழா - Honorable Mention
1989 ஏக் தின் அச்சனக்
கெய்ரோ திரைப்ப விழா - சிறந்த இயக்குநர்
2002 ஆமார் புவண்

(2000)

மிருணாள் சென் (Mrinal Sen; பிறப்பு மே 14. 1923 - 30 திசம்பர் 2018)[1] என்பவர் கல்கத்தாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறைய 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

பிறப்பும், கல்வியும்[தொகு]

மிருணாள் சென் தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் ஒரு இந்து குடும்பத்தில் 1923இல் பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தபின் கல்லூரி படிப்புக்காக கல்கத்தா வந்தார். கல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பான கலைப் பண்பாட்டு பிரிவில் ஈடுபாட்டுடன் இருந்தார் என்றாலும் கட்சியில் உறுப்பினராகவில்லை.

திரைப்படங்களின் மீதான ஆர்வம்[தொகு]

கொல்கத்தாவில் படிக்க வந்தபோது ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் எழுதிய ‘பிலிம் அஸ் ஆர்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். இதனால் இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். இவர் படித்து முடித்து சிலகாலம் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதியாக வேலையில் இருந்தார். பின் கல்கத்தா திரைப்பட ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.

திரைப்பட இயக்குநராக[தொகு]

இவர் முதன் முதலில் 1955இல் ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி அடையவில்லை. இரண்டாவதாக ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வாணத்திற்கு கீழே) என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. மூன்றாவதாக ‘பைஷே சிரவன்’ (இரவீந்திர நாத் தாகூர் இறந்த அன்று) என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

சென்னும் நவீன இந்திய திரைப்படங்களும்[தொகு]

இதன் பிறகு சென் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை ஆகும். இவர் இயக்கி 1969இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.[2]

அரசியல் அடையாளம்[தொகு]

இவரது துவக்கக்கால படங்களில் மார்க்சியத்தின் தாக்கம் வெகுவாக காணப்பட்டது. இவர் ஒரு மார்க்சிய கலைஞராக அடையாளம் காணப்பட்டார்.[3]

கல்கத்தாவும் சென்னின் திரைப்படங்களும்[தொகு]

இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரை கதைக்களமாகக் கொண்டவை. இவரது படங்களில் கல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். அந்த நகர் மக்களின் அழகியலையும், மதிப்புமிக்க வாழ்கை அமைப்பையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், நகரின் தெருக்கள் வழியாக அதன் பழமையை காண்பிப்பார்.[4]

அங்கிகாரம்[தொகு]

இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றது மட்டுமல்லாது கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.

விருதுகள்[தொகு]

தேசிய விருதுகள்[தொகு]

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது

இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தேசியவிருது

சிறந்த வங்கமொழித் திரைப்படத்துக்கான தேசியவிருது

சிறந்த தெலுங்கு திரைப்படத்துக்கான தேசியவிருது

தேசிய திரைப்படவிருது – Special Jury Award / Special Mention (திரைப்படம்)

 • 1978: Parashuram

சிறந்த இயக்குநருக்கான தேசியவிருது

சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது

பிலிம்பேர் விருதுகள்
Critics Award for Best Film
1976 Mrigayaa
சிறந்த திரைக்கதை
1984 Khandhar
Best Director - Bengali
1982 Akaler Shandhaney
Filmfare Lifetime Achievement Award
2017 Bengali Cinema

பன்னாட்டு விருதுகள்[தொகு]

மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா - வெள்ளிப் பரிசு
1975 Chorus[5]
1979 Parashuram[6]
Karlovy Vary International Film Festival - Special Jury Prize
1977 Oka Oori Katha
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா
Interfilm Award
1979 Parashuram
1981 Akaler Sandhane
Grand Jury Prize[7]
1981 Akaler Sandhane
கான் திரைப்பட விழா - Jury Prize
1983 Kharij
Valladolid International Film Festival - Golden Spike
1983 Kharij
Chicago International Film Festival - Gold Hugo
1984 Khandhar
Montreal World Film Festival - Special Prize of the Jury
1984 Khandhar
Venice Film Festival - Honorable Mention
1989 Ek Din Achanak
Cairo International Film Festival - Silver Pyramid for Best Director
2002 Aamaar

நாடுகளின் அங்கிகாரம்[தொகு]

குறிப்பு[தொகு]

 • He is a friend of Gabriel García Márquez and had often been invited as a judge in international film festivals.
 • In 2004, Mrinal Sen completed his autobiographical book, Always Being Born.
 • Life Time Achievement Award at 5th Global Film Festival Noida 2012.

திரைப்படவியல்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

 • ராத்போரே (விடியல்) (1955)
 • Neel Akasher Neechey (Under the Blue Sky) (1958)
 • பைசே ஷ்ரவண் (Wedding Day) (1960)
 • Punascha (Over Again) (1961)
 • Abasheshe (And at Last) (1963)
 • Pratinidhi (The Representative) (1964)
 • ஆகாஷ் குசும் (Up in the Clouds) (1965)
 • Matira Manisha (Man of the Soil) (Oriya Film) (1966)
 • புவன் ஷோம் (Mr. Bhuvan Shome) (1969)
 • இன்டர்வியூ (1971)
 • Ek Adhuri Kahani (An Unfinished Story) (1971)
 • கல்கத்தா 71 (1972)
 • பதாடிக் (The Guerilla Fighter) (1973)
 • Chorus (1974)
 • மிருகயா (The Royal Hunt) (1976)
 • ஒக ஊரி கதா (The Outsiders) (1977)
 • Parasuram (The Man with the Axe) (1978)
 • ஏக்தின் பிரதிதின் (And Quiet Rolls the Dawn) (1979)
 • அகாலே சந்தனே (In Search of Famine) (1980)
 • Chalchitra (The Kaleidoscope) (1981)
 • Kharij (The Case Is Closed) (1982)
 • Khandhar (The Ruins) (1983)
 • ஜெனிஸிஸ் (1986)
 • Ek Din Achanak (Suddenly, One Day) (1989)
 • Mahaprithivi (World Within, World Without) (1991)
 • Antareen (The Confined) (1993)
 • Aamaar Bhuvan (This, My Land) (2002)

குறும்படங்கள்[தொகு]

 • Ichhapuran (The Wish Fulfillment) (1970)
 • Tasveer Apni Apni (Portrait of an Average Man) (1984)
 • Aparajit (Unvanquished) (1986–87)
 • Kabhi Door Kabhi Paas (Sometimes Far, Sometimes Near) (1986–87)
 • Swamvar (The Courtship) (1986–87)
 • Aina (The Mirror) (1986–87)
 • Ravivar (Sunday) (1986–87)
 • Aajkaal (These Days) (1986–87)
 • Do Bahene (Two Sisters) (1986–87)
 • Jit (Win) (1986–87)
 • Saalgira (Anniversary) (1986–87)
 • Shawl (1986–87)
 • Ajnabi (The Stranger) (1986–87)
 • Das Saal Baad (Ten Years Later) (1986–87)

ஆவணப்படங்கள்[தொகு]

 • Moving Perspectives (1967)
 • Tripura Prasanga (1982)
 • City Life — Calcutta My El Dorado (1989)
 • And the Show Goes On — Indian Chapter (1999)

திரைப்படங்களில் மிருணாள் சென்[தொகு]

 • Ten Days in Calcutta — A Portrait of Mrinal Sen (Directed by Reinhard Hauff) (1984)
 • With Mrinal Sen (Directed by Sanjay Bhattacharya and Rahul Bose) (1989)
 • Portrait of a Filmmaker (Directed by Romesh Sharma) (1999)
 • A man behind the curtain (Directed by Supantho Bhattacharya) (1998)
 • A Documentary Proposal(Directed by R.V. Ramani) (2014)

மேற்கோள்[தொகு]

 1. "தாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் காலமானார்". தினமணி. 30 திசம்பர் 2018. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/dec/30/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3067947.html. பார்த்த நாள்: 30 திசம்பர் 2018. 
 2. Vasudev, Aruna (1986). The New Indian Cinema. Macmillan India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-90928-3. 
 3. Thorval, Yves (2000). Cinemas of India. Macmillan India. பக். 280–282. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-93410-5. https://archive.org/details/cinemasofindia0000thor. 
 4. "Mrinal Sen movies and Kolkata".
 5. "9th Moscow International Film Festival (1975)". MIFF. Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.
 6. "11th Moscow International Film Festival (1979)". MIFF. Archived from the original on 2014-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-01-19.
 7. "Berlinale 1981: Prize Winners". berlinale.de. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
 8. The International Who's Who 2004
 9. Stellar Publishers
 10. "51st National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 11. "Annual Convocation". University of Calcutta. Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாள்_சென்&oldid=3718183" இலிருந்து மீள்விக்கப்பட்டது