கூகுளின் கேலிச்சித்திரம் (கூகுள் டூடில்)
கூகுளின் கேலிச்சித்திரம் (Google Doodle) என்பது விடுமுறை, நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க, கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் கூகுளின் அடையாளச் சின்னத்தில் ஏற்படுத்தப்படும் சிறப்பான தற்காலிக மாற்றம் ஆகும். கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998 ஆம் ஆண்டில், எரியும் மனிதன் விழாவை சிறப்பிக்கும் விதமாக அமைந்தது. வலையமைப்பு சேவையகங்கள் செயலிழந்தால், தாங்கள் இல்லாததை பயனர்களிடம் தெரிவிக்கவே இதை லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் வடிவமைத்தனர். தொடர்ந்து வந்த சில கூகுளின் கேலிச்சித்திரங்களை வெளி ஒப்பந்தக்காரர் வடிவமைத்தார். 2000-ஆம் ஆண்டில் பாஸ்டில் நாளுக்கான இலச்சினை வடிவமைக்க பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் வெளி உறவி அதிகாரி டென்னிஸ் ஹூவாங்கை கேட்டுக் கொண்டனர். கேலிச்சித்திரங்களை ஏற்பாடு செய்து வெளியிட டூடுலேர்ஸ் (doodlers) எனும் ஊழியர்கள் குழு ஒன்று செயல்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Doodle 4 Google". Archived from the original on February 5, 2014. Retrieved April 23, 2014.
- ↑ "Burning Man Festival". www.google.com (in ஆங்கிலம்). Archived from the original on May 11, 2020. Retrieved 20 March 2021.
- ↑ Megan, Garber (September 6, 2013). "The First Google Doodle Was a Burning Man Stick Figure". The Atlantic. The Atlantic Monthly Group. Archived from the original on September 7, 2013. Retrieved August 3, 2020.