பாஸ்டில் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
14 ஜூலை நிகழ்வுக்காக Champs-Élysées கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
பாஸ்டில் நாளில் ஐஃபல் கோபுரம்

பாஸ்டில் நாள் (Bastille Day) என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் "Fête Nationale" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது "quatorze juillet" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டில்_நாள்&oldid=1754365" இருந்து மீள்விக்கப்பட்டது