உள்ளடக்கத்துக்குச் செல்

கைம்முரசு இணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாள இசைக்கருவி
வகைப்பாடுIndian percussion instrument, goatskin heads with syahi
வரிசை
Bolt tuned or rope tuned with dowels and hammer
தொடர்புள்ள கருவிகள்

Pakhavaj, தண்ணுமை, Khol

கைம்முரசு இணை (தபேலா அல்லது தப்லா அல்லது இருமுக முழவு) இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். கடந்த 200 ஆண்டுகளிலேயே கைம்முரசு இரண பிரபல்யம் அடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் கைம்முரசு இணை ஜதிகளை (டேக்காக்களை) அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க வேண்டும்.[1][2][3]

கைம்முரசு இணையின் அமைப்பு

[தொகு]
பொ.ஊ.மு. 200 சிற்பங்கள் பஜே குகைகள், மகாராஷ்டிரா, இந்தியா தபலா மற்றும் நிகழ்ச்சி மற்றொரு நடன விளையாடி ஒரு பெண் காட்டும்.

கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும். இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.

உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1 அங்குலம் அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

வாசிக்கும் முறை

[தொகு]

கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.

பிரபல கைம்முரசு இணைக் கலைஞர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tabla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. Abram, David (1994). India: The Rough Guide (in ஆங்கிலம்). Rough Guides. p. 1137. ISBN 978-1-85828-104-9.
  2. Ellingham, Mark (1999). The Rough Guide to World Music (in ஆங்கிலம்). Rough Guides. p. 73. ISBN 978-1-85828-636-5.
  3. Don Michael Randel (2003). The Harvard Dictionary of Music. Harvard University Press. pp. 820, 864. ISBN 978-0-674-01163-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைம்முரசு_இணை&oldid=3893664" இலிருந்து மீள்விக்கப்பட்டது