சேவூர் ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேவூர் எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், சேவூர் ஆகும். இவர் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ளார். இவரது மனைவி பெயர் மணிமேகலை இவருக்கு இரு மகன்களும் உள்ளனர். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பேரவையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக இருந்துள்ளார். 1996-2001 வரை ஒன்றியக்குழு உறுப்பினர், 2006-11 சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர். 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு முதல் முறையாக ஆரணி தொகுதியிலிருந்து உறுப்பினரானவர். தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு". தினமணி. பார்த்த நாள் 13 சூன் 2016.