சோ. தட்சணாமூர்த்தி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோ. தட்சணாமூர்த்தி முதலியார் (S. Dhakshinamurthy Mudaliar, 26 பிப்ரவரி, 1925 - 23 சூன், 2015) என்பவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[1][2]

[3][4]

பிறப்பு[தொகு]

இவர் அன்றய பிராஞ்சு பன்டிச்சேரி, திருமலைராயன்பட்டினத்தில் 1925 ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாளில் சோமசுந்தர முதலியார் மற்றும் அஞ்சலம்மாள் தம்பதினருக்கு மகனாக செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூககத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் இருவர் மூத்தவர்கள் ஒருவர் இளைய சகோதரி.[5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

முதலியார் தனது ஆரம்ப கால கல்வி மற்றும் PUC படிப்பை வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் படித்தார்.

காந்திய கொள்கையில் நாட்டம் ஏற்பட்ட முதலியார் காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.

1944 ஆம் ஆண்டில் மரகதவல்லி அம்மையாரை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

1955ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டசபை தேர்தலில் முதலியார், திருமலைராயப்பட்டினம் தெற்கில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

புதுவை அமைச்சரவையில் சுகாதாரத்துறை அன்னாருக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இவர் பல ஆண்டுகள் பதவி வகித்தார். 

1955 நவம்பரில் பிரெஞ்ச் இந்தியா, இந்திய யூனியனுடன் இணைந்தது அப்போது கொம்யூன் பஞ்சாயத்து தலைவராக முதலியார் இருந்தபடியால் பிரெஞ்ச் கொடியை இறக்கிவிட்டு இந்திய யூனியன் கொடியை முதன் முதல் ஏற்றி வைத்தார்

பின்பு பொதுத் தேர்தல் வந்தது, அந்தத் தேர்தலில் இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு சென்றார்

சுகாதாரம் கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட இவர் டெல்லியில் அகில இந்திய கூட்டுறவு மாநாடு அப்போதைய பாரதப் பிரதமர் பண்டித அவர்களின் தலைமையில் நடந்தது அதற்கு புதுவையிலிருந்து இவர்க்கு முதன்முதலாக புதுடெல்லி செல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

இவரின் கடின உழைப்பால் புதுவை மாநிலத்துக்கு 6 ஆரம்ப சுகாதார மருத்துவமனை உருவாக்கிக் கொடுத்தார்.

இவரின் கடின உழைப்பால் புதுவையில் நூறு ஏக்கர் பரப்பளவில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டது. இன்று அந்த மருத்துவமனையின் பல்லாயிரம் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வருகிறது.

இவர் கொம்யூன் நகராட்சித் தலைவராக இருக்கும் போது திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவில் செயலாளராக புதுவை அரசாங்கம் நியமித்தது.

திருப்பட்டினம் அபிராமி அம்பாள் சமேத ராஜ சோழீஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழுத் தலைவராக பணியாற்றினார்

ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் செங்குந்தர் மடத்தில் உள்ள கமிட்டியில் இவரும் ஒருவராகப் பங்கேற்று பல பூசைகளை ஊரார் ஒத்துழைப்புடன் செய்து இருக்கின்றார்.[6]

நேரு அவர்களிடமும் இந்திரா காந்தி அவர்களிடமும் நேரடித் தொடர்பு உள்ளவர் என்ற அடிப்படையில் அப்போதைய பிரதமரை வலியுறுத்தி புதுவைக்கு பல நன்மைகள் செய்துள்ளார்.

இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸின் முன்னணி தலைவராக இருந்தார்

இவர் 23 ஜூன்,  2015 அன்று மறைந்தார். இவர் மறைவுக்கு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இரங்கல் செய்தி வெளியிட்டார்.[7] [8] [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Puducherry minister passed away" (in English). தி எகனாமிக் டைம்ஸ். 24 June, 2015. https://m.economictimes.com/news/politics-and-nation/former-puducherry-minister-dhakshinamurthy-mudaliar-passes-away/articleshow/47795958.cms. 
  2. "புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மரணம்" (in தமிழ்). தினமலர். 25 June, 2015. https://m.dinamalar.com/detail.php?id=1282377. 
  3. Nā Muttaiyā (2020). செங்குந்த மித்திரன். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். பக். 1. https://archive.org/stream/sm-june-2020-final/mode/1up. 
  4. செங்குந்த மித்திரன். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். 2020. பக். 34-39. https://archive.org/stream/sm-june-2020-final/page/n34/mode/1up. 
  5. செங்குந்த மித்திரன். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். 2020. பக். 34-39. https://archive.org/stream/sm-june-2020-final/page/n34/mode/1up. 
  6. செங்குந்த மித்திரன். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். 2020. பக். 34-39. https://archive.org/stream/sm-june-2020-final/page/n34/mode/1up. 
  7. "Former Puducherry Minister Dhakshinamurthy passes  away" (in English). News 18. 24 June, 2015. https://www.news18.com/news/india/former-puducherry-minister-dhakshinamurthy-passes-away-1010930.html. 
  8. "Former Puducherry Minister passes  away" (in English). தி இந்து. 24 June, 2015. https://www.thehindu.com/news/cities/puducherry/former-pondy-minister-passes-away/article7349676.ece. 
  9. [President Mukherjee condoles demise of Dhakshinamurthy Mudaliar https://wap.business-standard.com/article-amp/news-ani/president-mukherjee-condoles-demise-of-dhakshinamurthy-mudaliar-115062401352_1.html]