மயில்சாமி அண்ணாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில்சாமி அண்ணாதுரை
பிறப்பு2 சூலை 1958 (1958-07-02) (அகவை 65)
கோதவாடி, கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
குடியுரிமைஇந்தியர்
துறைவானியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
கல்வி கற்ற இடங்கள்இளநிலை பொறியியல், (1980) Govt. College Of Technology, கோயம்புத்தூர், முதுநிலை பொறியியல் (இலத்திரனியல்),1982, பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி கோயம்புத்தூர்.
அறியப்படுவதுசந்திரயான்-1, சந்திரயான்-2, இந்திய விண்வெளித் திட்டம்
குறிப்புகள்
திட்ட இயக்குனர், சந்திரயான்-1 & சந்திரயான்-2

மயில்சாமி அண்ணாதுரை[1] (Mylswamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும்[2] , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்[3]. இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்[4] இயக்குனராகப் பணிபுரிந்தார். அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.[5]

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில்[6] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.

தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

பிறப்பும், கல்வியும்[தொகு]

1958ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதவாடி கிராமத்தில் மயில்சாமி - பாலசரசுவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[7] பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ. சா. கோ.தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு & தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம்[தொகு]

தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார்[3] .

புத்தகங்கள்[தொகு]

மயில்சாமி அண்ணாதுரை தமிழில் ஆறு நூல்களை எழுதியுள்ளார். அவை:

 1. கையருகே நிலா
 2. சிறகை விரிக்கும் மங்கள்யான்
 3. வளரும் அறிவியல்
 4. அறிவியல் களஞ்சியம்
 5. விண்ணும் மண்ணும்.
 6. இந்தியா - 75 போர்முனை முதல் ஏர்முணைவரை

"கையருகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது.

"விண்ணும் மண்ணும்" என்ற நூல் 2021 க்கான மணவை முஸ்தபா அறிவியல் விருதைப் பெற்றுள்ளது.

பெற்ற பட்டங்களும் சிறப்புக்களும்[தொகு]

மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்[8]. அவற்றில் சில பரிசுகளும் பட்டங்களும்,

 • கர்மவீரர் காமராசர் நினைவு விருது
 • நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்
 • முனைவர் பட்டங்கள் (புதுச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்[9], சென்னைப் பல்கலைக்கழகம்[10], எம். ஜி. ஆர். பல்கலைக்கழகம்[11])
 • சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்
 • ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது
 • சர். சி. வி. இராமன் நினைவு அறிவியல் விருது
 • ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது
 • கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது (2008)[12]
 • எச். கே. ப்ரோடிய தேசிய அறிவியல் விருது (2009)[13]
 • தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது
 • ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது
 • அமர பாரதி தேசிய அறிவியல் விருது
 • தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது
 • கொங்குச் சாதனையாளர் விருது
 • தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்
 • அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி
 • டாக்டர் இரஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012
 • சி. பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013
 • டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு அறிவியல் தொழில் நுட்ப சாதனை விருது, 2023, இந்திய அறிவியல் மன்றம்( Indian Science Forum, Oman), ஓமன்

பத்மசிறீ விருது[தொகு]

இந்திய அரசு இவருக்கு 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மசிறீ விருதினை வழங்கியது.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. [http:// https://en.wikipedia.org/wiki/Mylswamy_Annadurai]
 2. [1]
 3. 3.0 3.1 title= Annadurai has been appointed as Vice President for TamilNadu Sate Council for Science and Technology
 4. [2]
 5. [3]
 6. [4]
 7. Leader, The Weekend. "How the son of a poor school teacher launched himself into the orbit of India's greatest scientists". www.theweekendleader.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 8. [5]
 9. "Doctorate awarded by Anna University, Chennai for Annadurai". Asiantribune.com. Archived from the original on 3 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
 10. "Doctorate awarded by Madaras University for Annadurai". தி இந்து. 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
 11. "Doctorate for Chandrayaan director". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://newindianexpress.com/cities/chennai/article12889.ece. 
 12. "Rajyotsava awards for space scientists". The Hindu (Chennai, India). 30 October 2008 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105143125/http://www.hindu.com/thehindu/holnus/004200810302033.htm. 
 13. "HK Firodia award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 December 2009 இம் மூலத்தில் இருந்து 2012-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025131326/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-06/pune/28067333_1_yash-pal-chandrayaan-1-m-annadurai. 
 14. "Padmashree award for Mylswamy Annadurai". New Delhi, India. https://commons.wikimedia.org/wiki/File:The_President,_Shri_Pranab_Mukherjee_presenting_the_Padma_Shri_Award_to_Dr._Mylswamy_Annadurai,_at_a_Civil_Investiture_Ceremony,_at_Rashtrapati_Bhavan,_in_New_Delhi_on_March_28,_2016.jpg. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்சாமி_அண்ணாதுரை&oldid=3822567" இலிருந்து மீள்விக்கப்பட்டது