ந‌. வளர்மதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ந‌. வளர்மதி இஸ்ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், சரல், ஜிசாட் 7, மார்ஸ் மிஷன், ஜிசாட் 14 எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினை பெற்ற முதலாவது நபர் இவராவார்.

வாழ்க்கை[தொகு]

பிறப்பும் கல்வியும்[தொகு]

வளர்மதி தமிழ்நாட்டில் அரியலூரில் பிறந்து வளர்ந்தவர்.[1] நடராஜன் - ராமசீத்தா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தவர்.

அரியலூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர். கோவை, அரசுக் கல்லூரியில் பி.இ., மின்னியல் பொறியியலும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., தொடர்பாடல் முறைமை படித்து முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதையடுத்து 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார். DRDO மற்றும் ISRO இரண்டிலும் வாய்ப்புகள் வந்தபோது இஸ்ரோவினை தேர்ந்தெடுத்தவர்.

விண்வெளித் தொழில் நுட்ப ஆய்வு[தொகு]

1984 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வரும் 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ரேடார் இமேஜ் சாட்டிலைட்' (ரிசாட் 1) திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது.

குடும்பம்[தொகு]

கணவர் ஜி. வாசுதேவன் வங்கியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பெற்ற பட்டங்களும் சிறப்புக்களும்[தொகு]

விருதுகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந‌._வளர்மதி&oldid=2455187" இருந்து மீள்விக்கப்பட்டது