ஜிசாட்-14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிசாட்-14
திட்ட வகைதொலைத்தொடர்பு
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்டக் காலம்12 வருடங்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
விண்வெளிப் பயன்பாட்டு மையம்
ஏவல் திணிவு1,982 கிலோகிராம்கள் (4,370 lb)
உலர் நிறை851 கிலோகிராம்கள் (1,876 lb)
திறன்2,600 watts
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 ஜனவரி 2014 (ஏவப்பட்டது)[1]
ஏவுகலன்ஜி. எஸ். எல். வி டி5
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவி ஒத்திணைவு வட்டப்பாதை
Longitude75° கிழக்கு
Epochதிட்டமிடப்பட்டுள்ளது
Transponders
Band6 கேயூ வரிசை
6 நீட்டிக்கப்பட்ட சி வரிசை
2 கேஏ வரிசை
Coverage areaஇந்தியா

ஜிசாட்-14 (GSAT-14) என்பது இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.[2] இச்செயற்கைக் கோளானது 2004 ஆம் ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-3 ற்கு மாற்றாக செலுத்தப்படுகிறது. இச்செயற்கைக் கோள் செலுத்தப்படும் ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் மூன்றாவது நிலையில் இந்தியாவில் தயாரித்த க்ரையோஜெனிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கைக் கோள்[தொகு]

ஜிசாட்-14 என்பது ஜிசாட் வரிசைச் செயற்கைக் கோள்களுள் ஒன்றாகும். இதன் நிறை 851 கிலோகிராம்கள் ஆகும். எரிபொருளோடு இதன் எடை 1,982 கிலோகிராம்கள் ஆகும். இதன் ஆயுட் காலம் 12 ஆண்டுகள்.[3] இச்செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதிக்காக 6 கேயூ-வரிசை (Ku-band)' மற்றும் 6 நீட்டிக்கப்பட்ட சி-வரிசை (Extended C-band) ட்ரான்ஸ்பாண்டுகளைக் கொண்டுள்ளது. இவை இந்தியா முழுமைக்குமான தகவல் தொடர்பிற்கு வழிவகை செய்யும்.[4] மேலும் இது இரண்டு கேஏ-வரிசை (Ka-band) ட்ரான்ஸ்பாண்டுகளையும் கொண்டுள்ளது. இந்த கேஏ-வரிசை (Ka-band) ட்ரான்ஸ்பாண்டுகளானது பருவநிலை மாற்றம் கேஏ-வரிசை (Ka-band) ட்ரான்ஸ்பாண்டுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சோதனைச் செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ளது.[5] இச்செயற்கைக் கோளில் உள்ள இரண்டு சூரியத் தகடுகள் 2,400 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.[3]

செலுத்துதல்[தொகு]

இந்தச் செயற்கைக் கோளானது முதலில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 ஆம் தியதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செலுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் செலுத்து வாகனத்தின் க்ரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது.[6][7][8][9] இதன் காரணமாய் ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் இரண்டாவது நிலை புதியதாக மாற்றப்பட்டது.[10] 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணி அளவில் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.[11] இதுவரையிலான ஜி. எஸ். எல். வி தொடர் தோல்விகளைத் தாண்டி இந்த ஏவுதலில் வெற்றி பெறமுடியும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.[12] மேலும் க்ரையோஜெனிக் இயந்திரத்தின் முதல் வெற்றியாகவும் இது இருக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் 29 மணிநேர கடைசிக்கட்ட தயார் நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தியதி தொடங்கியது.[13] மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரண்டு மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.[13] 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. [14]

திட்டச் செலவு[தொகு]

ஜிசாட்-14 செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கு 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.[15]

வெளி இணைப்புகள்[தொகு]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-indigenous-cryogenic-engine-powered-GSLV-D5/articleshow/28437867.cms
 2. http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-indigenous-cryogenic-engine-powered-GSLV-D5/articleshow/28437867.cms
 3. 3.0 3.1 "GSLV-D5 Brochure". ISRO. பார்த்த நாள் 19 August 2013.
 4. "GSLV to launch GSAT–14 during mid-2012". The Hindu (18 June 2011). பார்த்த நாள் 20 March 2013.
 5. "Statistics".
 6. "ISRO aborts GSLV-D5 launch after fuel leak". The Hindu. பார்த்த நாள் 19 Aug 2013.
 7. "ISRO's GSLV-D5 launch put on hold due to fuel leakage". IBN Live. பார்த்த நாள் 19 Aug 2013.
 8. "Successful ignition of indigenous cryogenic engine". The Hindu. Chennai. 29 March 2013. http://www.thehindu.com/sci-tech/science/successful-ignition-of-indigenous-cryogenic-engine/article4559154.ece. பார்த்த நாள்: 1 April 2013. 
 9. "ISRO’s GSLV-D5 slated for August 19 launch". Zee Media Bureau. 23 July 2013. http://zeenews.india.com/news/space/isros-gslv-d5-slated-for-august-19-launch_864162.html. பார்த்த நாள்: 14 August 2013. 
 10. "Isro to make new stage for GSLV". Deccan Herald 13 September 2013
 11. http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-indigenous-cryogenic-engine-powered-GSLV-D5/articleshow/28437867.cms
 12. Graham, William (19 August 2013). "Indian GSLV set to launch GSAT-14 communications satellite". NASASpaceflight.com. பார்த்த நாள் 19 August 2013.
 13. 13.0 13.1 "GSLV-D5 is ready to put GSAT-14 into orbit". Crazy Engineers (30 December 2013). பார்த்த நாள் 31 December 2013.
 14. http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-indigenous-cryogenic-engine-powered-GSLV-D5/articleshow/28437867.cms
 15. http://www.dinamalar.com/news_detail.asp?id=889012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசாட்-14&oldid=1600745" இருந்து மீள்விக்கப்பட்டது