வான்வெளிப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்வெளிப் பொறியியலாளர்
அப்பல்லோ 13 திட்டத்தின்போது திட்ட கட்டுப்பாட்டு மையத்தில் நாசா பொறியியலாளர்கள் வானோடிகளின் உயிரைக் காக்க மிகவும் சமயோசிதமாக பணியாற்றினர்.
தொழில்
பெயர்கள் பொறியியலாளர்
வான்வெளிப் பொறியியலாளர்
வகை தொழில்முறைப் பணி
செயற்பாட்டுத் துறை வான்வெளியியல், விண்வெளியியல், அறிவியல்
விவரம்
தகுதிகள் தொழினுட்ப அறிவு, மேலாண்மைத் திறன்
தொழிற்புலம் தொழினுட்பம், அறிவியல், விண்வெளிப் பயணம், படைத்துறை

வான்வெளிப் பொறியியல் (aerospace engineering) வானூர்தி, விண்கலம் குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை பொறியியல் பிரிவாகும்.[1] இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: வானூர்திப் பொறியியல் மற்றும் விண்கலப் பொறியியல். முன்னது புவியின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும். வான் மின்னனியல் Avionics) வான்வெளிப் பொறியியலின் மின்னணுவியல் பிரிவாகும்.

வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், ஏவூர்திகள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் காற்றியக்கவியலின் பண்புகளையும் நடத்தைகளையும் காற்றிதழ், பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.

இத்துறை முன்னதாக வான்கலவோட்டப் பொறியியல் (Aeronautical engineering) என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.[2] வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலவோட்டப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "ஏவூர்தி அறிவியல்",[3] எனப்படுகிறது.

பருந்துப் பார்வை[தொகு]

பறக்கும் ஊர்திகளின் உறுப்புகள் தொடர்ந்த வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் கட்டமைப்புச் சுமைகளுக்கு ஆட்படுகின்றன. எனவே, அந்த உறுப்புகள் பல்வேறு தொழில்நுட்ப, பொறியியல் புலங்களின் கூட்டுவடிவடிவமைப்பால் உருவாகின்றன. இப்புலங்களில் காற்றியங்கியல், காற்று முற்செலுத்தம், வான் மின்னனியல், பொருள் அறிவியல், கட்டமைப்புப் பகுப்பாய்வு, பொருளாக்கம் ஆகிய புலங்கள் அடங்கும்மித்தொழில்நுட்பங்களின் ஊடாட்டம் வான்வெளிப் பொறியியல் எனப்படுகிறது. பலபுலங்கள் அடங்கிய சிக்கலால், வன்வெளிப் பொறியியல் பலதுறைப் புலம வாய்ந்த பொறியாளர் குழுவால் நிறைவேற்றப்படுகின்றது.[4]

வரலாறு[தொகு]

மேலும் காண்க:காற்றியக்க வரலாறு

ஆர்வில் ரைட், வில்பர் ரைட் ரை பறப்புகலத்தில் பறத்தல், 1903, கிட்டி காவுக், வட கரோலினா.

சர் ஜார்ஜ் காலே 18 முதல் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே இத்துரையில் பணிபுரிந்திருந்தாலும் வான்வெளிப் பொறியியலின் தோற்ரம் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது எனலாம். இவர் தான் வான்கலவோட்டத் துறையின் வரலாற்றில் மிக முதன்மையானவர்களில் ஒருவராவார்.[5] காலே வான்கல ஓட்டப் பொறியியலின் முன்னோடியாவார்[6] இவர் தான் காற்றுக்கலத்தின் மீது செயல்படும் விசைகளான தூக்கல் விசையையும் பின்னிழுப்பு விசையையும் முதலில் பிரித்துக் காட்டியவர் ஆவார்.[7]

வான்கலமோட்டலின் தொடக்கநிலை அறிவு பல பொறியியல் புலங்களில் இருந்து பெற்ற கருத்துப்படிமங்களையும் திறமைகளையும் சார்ந்த பட்டறிவுத் தன்மை வாய்ந்ததாகவே இருந்தது.[8] அறிவியலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டிலேயே வான்வெளிப் பொறியியலுக்குத் தேவைப்பட்ட சில முதன்மை அடிப்படைகளை பாய்ம இயங்கியல் வழியாக அறிந்திருந்தனர். இரைட் உடன்பிறப்பாளர்கள் 1910 களில் வெற்றிகரமாக வானூர்தியில் பறந்து காட்டிய பல்லாண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போரின் போர்வான்கல வடிவமைப்புகள் ஊடாக வான்கலவோட்டப் பொறியியல் மேற்கிளர்ந்து எழுந்தது.

வான்வெளிப் பொறியியலின் முதல் வரையறை 1958 பிப்ரவரியில் தோன்றியது.[2] இந்த வரையறை புவி வளிமண்டலத்தையும் அதற்கு அப்பால் நிலவும் புறவெளியையும் ஒருங்கே கருதியது. எனவே இது காற்றுவெளியில் இயங்கும் வானூர்தியையும் (வான்) புறவெளியில் இயங்கும் விண்கலத்தையும் (வெளி) இணையாகக் கொண்டு வான்வெளி எனும் கூட்டுச் சொல்லை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் 1957 அக்தோபர் 4 இல் முதல் செயற்கைக்கோளை (இசுபுட்னிக்) விண்வெளியில் ஏவியதும், அமெரிக்க வான்வெளீப் பொறியாளர்கள் முதல் அமெரிக்கச் செயற்கைக்கோளை (எக்சுபுளோரர்) 1958 ஜனவரி, 31 இல் ஏவினர். அமெரிக்காவில் நாசா நிறுவனமலிருநாட்டுப் பனிப்போரால் 1958 இல் நிறுவப்பட்டது.[9]

அடிப்படைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopedia of Aerospace Engineering. யோன் வில்லி அன் சன்ஸ். October 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-75440-5.
  2. 2.0 2.1 Stanzione, Kaydon Al (1989). "Engineering". Encyclopædia Britannica (15) 18. 563–563. 
  3. Longuski, Jim (2004). Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers. Reston, Virginia: AIAA (American Institute of Aeronautics and Astronautics). p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56347-655-X. If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist.
  4. "Career: Aerospace Engineer". Career Profiles. The Princeton Review. Archived from the original on 2006-05-09. பார்க்கப்பட்ட நாள் 2006-10-08. Due to the complexity of the final product, an intricate and rigid organizational structure for production has to be maintained, severely curtailing any single engineer's ability to understand his role as it relates to the final project.
  5. "Sir George Cayley". ?. பார்க்கப்பட்ட நாள் 2009-07-26. Sir George Cayley is one of the most important people in the history of aeronautics. Many consider him the first true scientific aerial investigator and the first person to understand the underlying principles and forces of flight.
  6. "Sir George Cayley (British Inventor and Scientist)". Britannica. n.d. பார்க்கப்பட்ட நாள் 2009-07-26. English pioneer of aerial navigation and aeronautical engineering and designer of the first successful glider to carry a human being aloft.
  7. "Sir George Cayley". U.S. Centennial of Flight Commission. பார்க்கப்பட்ட நாள் 31 January 2016. A wealthy landowner, Cayley is considered the father of aerial navigation and a pioneer in the science of aerodynamics. He established the scientific principles for heavier-than-air flight and used glider models for his research. He was the first to identify the four forces of flight--thrust, lift, drag, and weight—and to describe the relationship each had with the other.
  8. Kermit Van Every (1988). "Aeronautical engineering". Encyclopedia Americana 1. Grolier Incorporated. 
  9. "A Brief History of NASA". NASA. Archived from the original on 2010-11-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-20.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்வெளிப்_பொறியியல்&oldid=3697918" இலிருந்து மீள்விக்கப்பட்டது