சுப்பையா அருணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுப்பையா அருணன்
பிறப்பு திருநெல்வேலி, தமிழ் நாடு
வாழிடம் இந்தியா
தேசியம் இந்தியன்
துறை இயந்திரப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்
பணியிடங்கள் இஸ்ரோ
அறியப்படுவது மங்கள்யான் திட்டம்[1]

சுப்பையா அருணன் (Subbiah Arunan) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவராவார். திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் படித்தார். கோவையில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, 1984ல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.[2] 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார்.

பிற குறிப்புகள்[தொகு]

இசுரோவின் அறிவியல் அறிஞராகப் பணியில் இருந்த நம்பி நாராயணன் என்பவரின் மருமகன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Isro gears up to launch India’s first mission to Mars on November 5". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-11-06. http://articles.timesofindia.indiatimes.com/2013-10-30/science/43529364_1_pslv-xl-curiosity-rover-mars-orbit. பார்த்த நாள்: 2013-11-07. 
  2. ""மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி". Dinamalar. 2013-11-07. http://www.dinamalar.com/news_detail.asp?id=843906. பார்த்த நாள்: 2013-11-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பையா_அருணன்&oldid=2279664" இருந்து மீள்விக்கப்பட்டது