சிவதாணு பிள்ளை
சிவதாணு பிள்ளை (பிறப்பு:15 ஜூலை 1947) தமிழ் நாட்டின் நாகர்கோவிலில் பிறந்த ஒரு விஞ்ஞானி ஆவார். முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (2015–2018) கௌரவ சிறப்புப் பேராசிரியராகவும்[1] தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திர பொறியியல் துறையில் (2015–2016) கௌரவப் பேராசிரியராகவும் [1][2] இந்திய அறிவியல் நிறுவனத்தில் (2014–2015) வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணிபுரியும் இவர் ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரின் தந்தை ஆபத்து காத்தான் ஒரு ஆயுர்வேத மருத்துர். டி.வி.டி. பள்ளியில் பள்ளிப்படிப்பும், 1969 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் (BE - Electrical Engineering) முடித்தார். 1991 ஆம் ஆண்டில் ஹார்வர்டு வணிகப் பள்ளியில் மேற்படிப்பு (Advanced Management Program) படித்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]பொறியியல் படிப்பு படிக்கும் காலத்தில் சி.வி. ராமன், விக்ரம் சாராபாய் போன்றோரால் பாராட்டப் பெற்றவர். பின்னாளில் அப்துல் கலாமுடன் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்.
பிரமோஸ் ஏவுகணை
[தொகு]இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியால் உருவான பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பங்களித்துள்ளர். பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "For Trip To Mars, NASA Wants To Ride With ISRO". 28 February 2015. http://www.ndtv.com/india-news/for-trip-to-mars-nasa-wants-to-ride-with-isro-1281975.
- ↑ "Time for India to join global space rule framing to avoid NPT like mistake, say experts". 28 February 2015. http://www.business-standard.com/article/news-ani/time-for-india-to-join-global-space-rule-framing-to-avoid-npt-like-mistake-say-experts-116022800113_1.html.