உள்ளடக்கத்துக்குச் செல்

ப. வீர முத்துவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. வீரமுத்துவேல்
சந்திரயான்-3 வெற்றிக்குப்பின் வீரமுத்துவேல்
பிறப்பு22 அக்டோபர் 1976 (1976-Oct-22) (அகவை 48)
விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (முனைவர்)
பணிவான்வெளிப் பொறியியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
பணியகம்

பழனிவேல் வீரமுத்துவேல் (P. Veera Muthuvel) இந்திய விண்வெளித் துறையில் ஒரு அறிவியலாளர் ஆவார். இவர் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆய்வு மைய திட்ட இயக்குநர்களில் ஒருவர் ஆவார். சூலை 14, 2023-ல் சதீஸ் தவான் விண்வெளி மையத்தினால் ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்ட இயக்குநர் ஆவார்.[1][2]

கல்வி

[தொகு]

தமிழ்நாட்டின் விழுப்புரம் நகரில் 22 அக்டோபர் 1976 அன்று பிறந்தார் வீர முத்துவேல். இவருடைய தந்தை பழனிவேல் தெற்கு இரயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியவர். விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து பின்னர், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியலில் பட்டயப் படிப்பினை முடித்தார். விண்வெளியில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து இளநிலை பொறியல் பட்டமும், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை பொறியியல் பட்டமும் பெற்றார். இதன் பின்னர் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் விண்வெளி துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இந்திய விண்வெளி பணியில்

[தொகு]

சிக்கலான வன்பொருள் குறித்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட வீர முத்துவேல், 1989ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக சேர்ந்தார். இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தின் விண்வெளி உள்கட்டமைப்பு திட்டத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.[3] 2016ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணு தொகுப்பில் அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையினை பெங்களூருவில் உள்ள யு. ஆர். ராவ். செயற்கைக்கோள் மையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் வெளியிட்டார். இம்மையத்தில் 30 ஆண்டுகள் பல திட்டங்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, வீர முத்துவேல் 2019 ஆம் ஆண்டில், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சந்திரயான்-2 திட்டத்தை அதன் திட்ட இயக்குநராக மேற்பார்வையிட்ட வனிதாவுக்குப் பிறகு இவர் பதவியேற்றார். இவர் சந்திரயான் 2 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார், திட்டத்தின் வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கூறுகளில் நாசாவுடன் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டார்.[4]


மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/dec/19/tn-scientist-heading-chandrayaan-3-mission-known-for-his-technical-acumen-2078414.html
  2. "Railway Technician's Son, Chandrayaan 3 Project Director: The Inspiring Journey of ISRO Scientist P Veeramuthuvel". TimesNow (in ஆங்கிலம்). 2023-08-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  3. "Scientist Veera Muthuvel from Tamil Nadu: Son of railway technician from Villupuram, brains behind Chandrayaan-3". News9live (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  4. "Chandrayaan-3 Moon mission: Meet the people behind India's lunar mission". mint (in ஆங்கிலம்). 2023-08-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வீர_முத்துவேல்&oldid=3784834" இலிருந்து மீள்விக்கப்பட்டது