சந்திரயான்-2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரயான்-2
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம், உருசியா ஒண்றினைந்த விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகைதாய்க் கலம், இறங்குகலம் மற்றும் ஆய்வுக்கலம்
செயற்கைக்கோள்சந்திரன்
ஏவப்பட்ட நாள்டிசம்பர் 30, 2013 முதல் ஸ்ரீஹரிக்கோட்டா, இந்தியா[1]
ஏவுகலம்ஜி. எஸ். எல். வி
திட்டக் காலம்ஓராண்டு
இணைய தளம்இஸ்ரோ


சந்திரயான்-2( Chandrayaan-2 (சமக்கிருதம்: चन्द्रयान-२; Sanskrit: [tʃəndrəjaːn dʋi]; lit: Moon-vehicle[2][3] இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) சந்திரயான்-1 என்பதனை அடுத்து இந்தியா சார்பாக நிலாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கப்படும் இரண்டாவது ஏவூர்தி ஆகும்.[4] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் மேம்படுத்தப்பட்ட இந்த ஏவூர்தி ஜி. எஸ். எல். வி மார்க் III மூலமாக விண்னில் ஏவப்பட உள்ளது.[5]

சந்திரயான் திட்டங்கள்[தொகு]

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டன.

இப்பணித்திட்டங்களின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார்.

என்னென்ன கருவிகள்[தொகு]

சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான ஏவூர்தி (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும். இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்பப்படும். அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

லேண்ட் ரோவர்[தொகு]

தற்போது, சந்திரயான் -2 செயற்கைகோள் வடிவமைப்பு பணிகள் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து ரஷிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்தபடியாக, செயற்கை கோளின் பாதுகாப்பு அம்சங்களை வடிவமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு முழுவதும் அந்த பணிகள் நடைபெறும்.

அதற்காக, சந்திரயான் -1 கருவிகள் மூலமாக கிடைத்த விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது. அந்த கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இது தவிர வெளிநாடுகளின் பல்வேறு கருவிகளும் அந்த செயற்கை கோளில் எடுத்துச் செல்லப்படும்.

அதிக வெப்ப கதிரியக்கம்[தொகு]

லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்க செய்வது என்பதை அடையாளம் கண்டு வருகிறோம். சந்திரயான் -1 அனுப்பியுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் அதுபற்றி முடிவு எடுக்கப்படும். நிலவை சுற்றிலும் நிலவும் வெப்ப கதிரியக்கம் குறித்த முக்கியமான தகவலை சந்திரயான் -1, அளித்ததாக கருதுகிறோம்.

அதில் இருந்த `ஸ்டார் சென்சார்' கருவி பழுதானதன் மூலமாக அதை அறிந்து கொண்டோம். எதிர் பார்த்ததை விட அதிக அளவில் வலுவானதாக கதிரியக்கம் உள்ளது. சந்திரயான் -2 செயற்கைகோளில் வெப்ப ஏற்பு கருவி வடிவமைக்கும் போது, அந்த தகவலை கருத்தில் கொள்வோம்.

துல்லியமான படங்கள்[தொகு]

சில பிரத்யேக இடங்களில் கேமராக்களை பொருத்தும் திறமை நம்மிடம் இருக்கிறது. அதன் மூலமாக ஸ்டீரியோ டைப்பிலான படங்களை பெற முடியும். சமீபத்திய சூரிய கிரகணத்தின் போது, துல்லியமான படங்களை பெற்றதை குறிப்பிடலாம். பெங்களூர் அருகே பையலாலு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வு மையத்தின் மூலமாக நாசாவை விட சிறந்த படங்களை பெற முடிகிறது.

சந்திரயான்-1 செயற்கை கோளில் கருவிகளை அனுப்பி வைத்துள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கூட, மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. சந்திரயான் -1 மூலமாக, அவர்களிடம் இருப்பதை விட கூடுதலான அத்தியாவசிய தகவல்களை பெற்றிருப்பதாக கூறினர். இனிமேல், இந்திய விஞ்ஞானிகளும் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூட்டாக அமர்ந்து, சந்திரயான் -1 அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ய இருக்கிறோம்.

இவற்றையும் பார்க்கவும்‌[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Chandrayaan-2 launch by 2013". The Hindu. http://www.hindu.com/2009/07/05/stories/2009070556691600.htm. பார்த்த நாள்: 2009-07-06. 
  2. "candra". Spoken Sanskrit. பார்த்த நாள் 5 November 2008.
  3. "yaana". Spoken Sanskrit. பார்த்த நாள் 5 November 2008.
  4. "ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover". The Indian Express. Press Trust of India. 25 October 2017. http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/. பார்த்த நாள்: 21 December 2017. 
  5. Singh, Surendra (5 August 2018). "Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position". The Times of India. Times News Network. https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms. பார்த்த நாள்: 15 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரயான்-2&oldid=2743190" இருந்து மீள்விக்கப்பட்டது