உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

ஆள்கூறுகள்: 10°30′46″N 78°02′59″E / 10.512898°N 78.049858°E / 10.512898; 78.049858
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி (அ.தொ.க)
Government College of Technology (GCT)
கல்லூரியின் சின்னம்
வகைஅரசு தன்னாட்சி
உருவாக்கம்1945
கல்வி பணியாளர்
~155
பட்ட மாணவர்கள்~3600
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்~1200
அமைவிடம், ,
10°30′46″N 78°02′59″E / 10.512898°N 78.049858°E / 10.512898; 78.049858
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்http://www.gct.ac.in

அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி (Government College of Technology - GCT), தமிழ் நாட்டில் கோவை மாநகரில் உள்ள ஓர் அரசு தன்னாட்சி நுட்பவியல் கல்லூரியாகும்.

வரலாறு:

[தொகு]

இரண்டாம் உலகப் போரின் முடிவில், போரின் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கும், தொழில் மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்பட்ட தேர்ந்த பொறியாளர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் அன்றைய மதராஸ் அரசின் பொதுநலக் கொள்கையின் முலம் 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்தர் ஹோப் நுட்பவியல் கல்லூரி என்ற பெயரில், இந்த அ.தொ.க கல்லூரி தொடங்கப்பெற்றது. மக்கள் சேவகரும் தொழிலதிபருமான கோவை கோபால்சாமி துரைசாமி நாயுடு (கோ.து நாயுடு- ஆங்கிலம்: GD Naidu) அவர்களின் இரண்டு லட்ச ருபாய் நன்கொடையைப் பயன்படுத்தி, கோவை பீளமேட்டிலுள்ள அவருடைய நிறுவனம் இலவசமாக அளித்த இடத்தில் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. பின்னர் 1950 ஆம் ஆண்டு கோவை தடாகம் சாலையில் இப்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பெற்றது. 1951 ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பெற்று பொதுவியல், இயந்திரவியல் மற்றும் மின்பொறி இயல் ஆகிய துறைகளில் பட்ட படிப்புகள் வழங்கப்பெற்றன. கல்லூரியின் பிரதான கட்டிடம், 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் அன்றைய இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்துவைக்கப்பெற்றது.

துறைகள்:

[தொகு]

பொது பொறியியல், மின்பொறி மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல், உற்பத்தியியல், மின்னணு மற்றும் தொலைதொடரிபியல், கணினி ஆய்வியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், உயிர்தொழில்நுட்பவியல்.


முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு (GCT Alumni Association):

[தொகு]

இருபதிற்கும் மேற்பட்ட கல்வி ஊக்கதொகைகளினால் தற்போதைய மாணவர்களை ஊக்குவிப்பதுடன், கூட்டமைப்பு கல்லூரியின் முன்னேற்றதிக்கும் துணை நிற்கின்றது. நீண்டநாள் திட்டமான கூட்டமைப்பிற்கென்று ஒரு கட்டிடம் பல முன்னாள் மாணவர்களின் அன்பளிப்பினால் இப்போது கட்டிடமாக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறது. முழுக்க முன்னாள் மாணவர்களின் நன்கொடையினாலேயே முன்று கோடி ருபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த அ.தொ.க முன்னாள் மாணவர் பல்பயன் மையம், மார்ச் 9 , 2009 அன்று அடிக்கல்நாட்டி துவக்கப்பெற்றது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:

[தொகு]

மயில்சாமி அண்ணாதுரை - திட்ட இயக்குனர், சந்திராயன்-1 திட்டம், இந்திய விண்வெளி ஆய்வு மையம்.

வெளி இணைப்புகள்

[தொகு]