பாப்பம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பம்மாள்
பிறப்பு1914
தேவலபுரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ரங்கம்மாள்
பணிஉழவர்
அறியப்படுவதுஇயற்கை வேளாண்மை
விருதுகள்பத்மசிறீ

பாப்பம்மாள் (Pappammal) ( பிறப்பு 1914) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்கை விவசாயி ஆவார்.[1] தனது 105 வயதில், வயலில் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கும் மிக வயதான விவசாயி என்று வாதிடுகிறார்.[2] வேளாண் துறையில் முன்னோடியாகக் கருதப்படும் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வித் துறையுடன் இணைந்துள்ளார். இவர் தனது 105 வயதிலும், 2.5 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறார்.[3] இயற்கை வேளாண்மையில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஶ்ரீ விருதினை 2021ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது. [4][5][6] மார்ச் 2021ல் கோயம்புத்தூருக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 105 வயதான பாப்பாம்மாள் பாட்டியைச் சந்தித்து ஆசி பெற்றார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

எம். பாப்பம்மாள் அல்லது ரங்கம்மாள் 1914 ஆம் ஆண்டில் தேவலபுரம் கிராமத்தில் வேலம்மாள் மற்றும் மருதாச்சல முதலியார் ஆகியோருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே இவர் பெற்றோரை இழந்தார். இவரும் இவருடைய இரண்டு சகோதரிகளும் கோயம்புத்தூரில் உள்ள தேக்கம்பட்டியில் தங்கள் தந்தைவழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டனர். தனது பாட்டி நடத்தி வந்த கடையை வாரிசு என்ற முறையில் உரிமையாக்கிக் கொண்டு ஒரு உணவகத்தைத் திறந்தார்.[8] இந்தத் தொழிலிலிருருந்து இவர் பெற்ற இலாபத்திலிருந்து, கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இவர் தன் சகோதரியின் குழந்தைகளையும் வளர்த்தார்.[1]

இவர் காலை 5:30 மணிக்கு தனது நாளைத் தொடங்கி, காலை 6 மணிக்கு தனது பண்ணைக்குச் செல்கிறார். அங்கு இவர் மதியம் வரை வேலை செய்கிறார். இவருடைய குடும்ப உறுப்பினர்கள் இவருடைய உணவுப் பழக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை தான் இவரை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, இவருக்குப் பிடித்த உணவு ஆட்டிறைச்சி பிரியாணி ஆகும். இவர் தனது உணவில் நிறைய காய்கறிகளையும் கீரைகளையும் சாப்பிடுகிறார். இவர் உணவை இலையில் சூடாக சாப்பிடுகிறார். எந்த தட்டுகளையும் பயன்படுத்த மாட்டார். இவர் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதில்லை, சூடான நீரைக் குடிக்கிறார்.[9]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1959ஆம் ஆண்டில்,இவர் தேக்கம்பட்டி ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினராக இருந்தார். கராமடை பஞ்சாயத்து ஒன்றியத்தில் கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][10] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) உறுப்பினராகவும், மு. கருணாநிதியின் தீவிர ரசிகராகவும் உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Arivanantham, R. (2018-09-12). "At 103, hard work is what keeps her going" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/at-103-hard-work-is-what-keeps-her-going/article24930146.ece. 
  2. "Rs 2 doc, 105-year-old woman farmer among TN Padma winners". dtNext.in (in ஆங்கிலம்). 2021-01-26. Archived from the original on 2021-02-06. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  3. Derhgawen, Shubhangi (2021-01-27). "Twitter Celebrates 105-Year-Old Farmer Honoured With Padma Shri". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  4. "Padma Awards 2021: The heroes of Indian agriculture". Mintlounge (in ஆங்கிலம்). 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  5. "Organic farming pioneer: 105-year-old woman farmer from Coimbatore awarded Padma Shri". India Today (in ஆங்கிலம்).
  6. Reporter, Staff (2021-01-26). "Ten from T.N. chosen for Padma Shri" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/ten-from-tn-chosen-for-padma-shri/article33663179.ece. 
  7. பிரதமரை ஆசீர்வாதித்த 105 வயது பாப்பம்மாள்
  8. Singh, Ankita (2021-01-27). "Tamil Nadu: 105-Year-Old Woman Farmer From Coimbatore Awarded Padma Shri". The Logical Indian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "105-year-old organic farmer from Coimbatore is celebrating her Padma Shri award". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  10. "Meet Padma Shri Rangama, 105-year-old who donned many hats". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பம்மாள்&oldid=3679391" இலிருந்து மீள்விக்கப்பட்டது