தி. இரா. சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி. ஆர். சுந்தரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டி. ஆர். சுந்தரம்
TRSundaram.jpg
பிறப்புதிருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்
சூலை 16, 1907(1907-07-16)
கோயம்புத்தூர், இந்தியா
இறப்புஆகத்து 30, 1963(1963-08-30) (அகவை 56)
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார், பரவலாக டி. ஆர். சுந்தரம் அல்லது டி.ஆர்.எஸ் (சூலை 16, 1907 - ஆகத்து 30, 1963)[1] தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சிங்களத் திரைப்படங்களில் தனது பன்முகத் திறனை (நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு) வெளிப்படுத்தியவர். தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர் ஆவார்.

இளமை வாழ்க்கை[தொகு]

1907ஆம் ஆண்டு கோவையில் ஓர் செல்வவளமிக்க துணி வியாபாரி செங்குந்தகைக்கோளர் வம்சத்து புள்ளிகாரர் கோத்திரம் V.V.C.ராமலிங்கம் முதலியார்க்கு மகனாகப் பிறந்து தனது படிப்பை இந்தியாவில் துவங்கி இங்கிலாந்தின் லீட்சில் துகிலியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் தமது குடும்பத் தொழிலை மேற்பார்வையிட்டு வந்தார்.

1931ஆம் ஆண்டில் வெளியான காளிதாஸ் என்ற முதல் பேசும் திரைப்படத்தை அடுத்து திரைப்படத்துறை முதலீடு இலாபகரமாக இருந்தது. எஸ். எஸ் வேலாயுதம் என்பவருடன் இணைந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் உருவாக்கி திரைப்படங்களை தயாரிக்கலானார்.

திரை வாழ்க்கை[தொகு]

சிறிது காலத்திற்குப் பின்னர் வேலாயுதத்திடமிருந்து பிரிந்து தமது சொந்த நிறுவனமாக மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு அரங்கத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் கீழ் வெளியான முதல் திரைப்படம் 1937ஆம் ஆண்டில் வெளியான சதி அகல்யாவாகும். அடுத்த ஆண்டு பாலன் என்ற முதல் மலையாளப்படத்தை எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. செலங்கத், சஜு (29 ஜூன் 2014). "Leeds, love and Modern Theatres" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 16 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 ஆகஸ்ட் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._இரா._சுந்தரம்&oldid=2971501" இருந்து மீள்விக்கப்பட்டது