முல்லை முத்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முல்லை முத்தையா

பிறப்பு
சூன் 7, 1920(1920-06-07)

[1]
தேவக்கோட்டை[1]

இறப்பு 2000 (அகவை 79–80)
தொழில் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
நாடு இந்தியா
கல்வி 10-ம் வகுப்பு[1]

முல்லை முத்தையா (7, சூன், 1920 - 2000) ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. [2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திருமிபினார்.[3] 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாகி பாரதிதாசன்,[4] கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

 1. அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 2. இன்பம்
 3. தமிழ்ச்சொல் விளக்கம்
 4. தமிழர் இனிய வாழ்வு
 5. திருக்குறள் உரை-முழுவதும்
 6. நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
 7. பஞ்சாயத்து நிர்வாக முறை
 8. பார் புகழும் பாவேந்தர்
 9. பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து
 10. புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
 11. புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
 12. பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
 13. பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்
 14. மனம்போல வாழ்வு
 15. மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்
 16. மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
 17. மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
 18. முல்லை கதைகள்
 19. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

 1. 1.0 1.1 1.2 ராஜலட்சுமி சிவலிங்கம் (07 சூன் 2017). "முல்லை முத்தையா 10". தமிழ் இந்து. 9 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 2. http://thamizhagam.net/nationalized%20books/Mullai%20Muthaiah.html பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம் முல்லை முத்தையாவின் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள நூல்கள்
 3. புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23
 4. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9981:2010-07-16-01-37-31&catid=1149:10&Itemid=417 முல்லை முத்தையா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லை_முத்தையா&oldid=3225433" இருந்து மீள்விக்கப்பட்டது