பொன். இராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன். இராதாகிருஷ்ணன்
Pon Radhakrishnan
Ponji.jpeg
நிதித்துறை இணையமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 24 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் அருண் ஜெட்லி
முன்னவர் அர்ஜுன் ராம் மேக்வால்
பின்வந்தவர் அனுராக் தாகூர்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 24 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் நிதின் கட்காரி
பதவியில்
24 சனவரி 1999 – 24 மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 24 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் நிதின் கட்காரி
கன்னியாகுமரி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னவர் ஜெ. ஹெலன் டேவிட்சன்
பின்வந்தவர் எச். வசந்தகுமார்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் அளந்தங்கரை அகத்தீஸ்வரம் வட்டம்
கல்வி சட்டப் படிப்பு
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

பொன். இராதாகிருஷ்ணன் (ஆங்கிலம்:Pon Radhakrishnan) பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச்சு 1ந் தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை விருதுநகரிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.[1]

அரசியல் வாழ்க்கை

ஒன்பதாவது மக்களவைக்கு 1999ல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இணை அமைச்சர்

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.[2]

நரேந்திர மோதி அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை[3] இணை அமைச்சராக பணியாற்றினார். தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றிவருகிறார்.[4]

கட்சிப்பணி

2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை தமிழக பாசகவின் துணை தலைவராகவும், 2003–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2009–ம் ஆண்டு முதல் 2014 ஆகஸ்ட் 16 வரை தமிழக பாசகவின் தலைவராக இருந்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._இராதாகிருஷ்ணன்&oldid=2751705" இருந்து மீள்விக்கப்பட்டது