ஜெ. ஹெலன் டேவிட்சன்
ஜெ. ஹெலன் டேவிட்சன் | |
---|---|
[[ இந்தியா நாடாளுமன்றம்]] கன்னியாகுமரி | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | ஏ. வி. பெல்லார்மின் |
பின்னவர் | பொன். இராதாகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சூலை 1971 |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | டேவிட்சன் |
வாழிடம் | நாகர்கோவில் |
முன்னாள் கல்லூரி | புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் |
வேலை | அரசியல்வாதி |
ஜெ. ஹெலன் டேவிட்சன் (J. Helen Davidson) 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] ஒரு ஆசிரியரான இவர், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும், கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.[2] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் 1993 இல் டேவிட்சனை மணந்தார். ஹெலன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு இவரது குடும்பம் முக்கியப் பங்காற்றியது.
கல்வி
[தொகு]ஹெலன் டேவிட்சன் நாகர்கோவிலில் உள்ள சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். நாகர்கோவில், புனித சிலுவை கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதும், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[3]