கடலூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடலூர் மக்களவை தொகுதியில் திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

மக்களை உறுப்பினர்கள்[தொகு]

இங்கு முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

 • 1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
 • 1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை)
 • 1962 - ராமபத்ர நாயுடு (திமுக)
 • 1967 - வி.கே.கவுண்டர் (திமுக)
 • 1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
 • 1977 - பூவராகன் (காங்கிரஸ்)
 • 1980 - முத்துக்குமரன் (காங்கிரசு)
 • 1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)
 • 1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)
 • 1991 - கலியபெருமாள் (காங்கிரசு)
 • 1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா)
 • 1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக)
 • 1999 - ஆதி சங்கர் (திமுக)
 • 2004 - கே. வெங்கடபதி (திமுக)
 • 2009 - எசு. அழகிரி (காங்கிரசு)
 • 2014 - அருண்மொழித்தேவன் - அதிமுக

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

11 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. அழகிரி அதிமுகவின் எம். சி. சம்பத்தை 23,532 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எசு. அழகிரி காங்கிரசு 3,20,473
எம். சி. சம்பத் அதிமுக 2,96,941
எம். சி. தாமோதரன் தேமுதிக 93,172
சி. ஆரோக்கியதாசு பகுஜன் சமாஜ் கட்சி 8,269

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அருண்மொழித்தேவன் அ.தி.மு.க 4,81,429
நந்தகோபாலகிருஷ்ணன் தி.மு.க. 2,78,304
ஜெயசங்கர் தே.மு.தி.க. 1,47,606
கே.எஸ்.அழகிரி காங் 26,650

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
76.06% 78.69% 2.63%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
 2. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]