சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Photograph of Sarvepalli Radhakrishnan presented to First Lady Jacqueline Kennedy in 1962.jpg
2ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
13 மே 1962 – 13 மே 1967
பிரதமர் குல்சாரிலால் நந்தா (முதல் முறை)
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (2ஆவது முறை)
துணை குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன்
முன்னவர் ராஜேந்திர பிரசாத்
பின்வந்தவர் ஜாகிர் ஹுசைன்
1ஆவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
13 மே 1952 – 12 மே 1962
குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்
முன்னவர் -
பின்வந்தவர் ஜாகிர் ஹுசைன்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 5, 1888(1888-09-05)
திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 17 ஏப்ரல் 1975(1975-04-17) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) சிவகாமு
பிள்ளைகள் ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன்
பணி அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்
சமயம் இந்து மதம்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan, தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) (இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர்.[1]

இளமைக் காலம்[தொகு]

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.[2] இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,[2] தாயார் பெயர் சீதம்மா.[2] இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[3]

இல்லற வாழ்க்கை[தொகு]

இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[4] சிவகாமு,[5] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

அரசியல் நிலைபாடுகள்[தொகு]

1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.[6]

ஆசிரியப் பணி[தொகு]

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.[7]

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள்[தொகு]

 1. முதன்மை உபநிடதங்கள்
 2. இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
 3. இந்தியத் தத்துவம் தொகுதி I & II
 4. கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
 5. தம்மபதம்
 6. பகவத் கீதை விளக்க உரை
 7. கிழக்கும் மேற்கும்
 8. மகாத்மா காந்தி
 9. கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
 10. பிரம்ம சூத்திரம் விளக்க உரை
 11. இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
 12. இந்திய சமயங்களின் சிந்தனை
 13. இந்துஸ்தானின் இதயம்
 14. சமயமும் கலாச்சாரமும்
 15. சமகால இந்திய தத்துவம்
 16. சமயமும் சமுதாயமும்
 17. உண்மையான கல்வி
 18. இந்தியச் சமயங்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "DR. SARVEPALLI RADHAKRISHNAN - THE PHILOSOPHER PRESIDENT". பார்த்த நாள் 5 செப்டம்பர் 2014.
 2. 2.0 2.1 2.2 "TeluguOne". TeluguOne. பார்த்த நாள் 2011-08-31.
 3. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 11
 4. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 12
 5. Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled Sivakamu by Sarvepalli Gopal (1989); Sivakamuamma by Mamta Anand (2006); and still differently by others.
 6. மயிலைபாலு (5 செப்டம்பர் 2014). "அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்" 3. தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 5 செப்டம்பர் 2014.
 7. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509

வெளி இணைப்புகள்[தொகு]