ஓ. வி. அழகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ. வி. அழகேசன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், அரக்கோணம்
பதவியில்
1975–1979
பிரதமர் இந்திரா காந்தி,
மொரார்ஜி தேசாய்,
சரண் சிங்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், திருத்தணி
பதவியில்
1971–1975
பிரதமர் இந்திரா காந்தி
எத்தியோப்பியாவின், இந்தியத் தூதர்
பதவியில்
1968–1971
பிரதமர் இந்திரா காந்தி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், செங்கல்பட்டு
பதவியில்
1951–1957
பிரதமர் ஜவகர்லால் நேரு
பதவியில்
1962–1967
பிரதமர் ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 6, 1911(1911-09-06)
இறப்பு 3 சனவரி 1992(1992-01-03) (அகவை 80)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல்[தொகு]

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை பங்காற்றினார். 1951 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்பு மீண்டும் அதே தொகுதியில் 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் இத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்பு 1971 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், திருத்தணி தொகுதியிலும், 1975 ஆம் ஆண்டு அரக்கோணம் தொகுதியிலும் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.

1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடுவண் அமைச்சரவையில் இருந்து, உணவு அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியனுடன் பதவி விலகி இந்தி திணிப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

இவர் 1968 முதல் 1971 வரை எத்தியோப்பியாவிற்கு இந்திய தூதராகப் பணியாற்றியுள்ளார்.

பிற பணிகள்[தொகு]

  • தமிழ்நாடு அரசு மேனாள் முதல்வர் பக்தவத்சலம் பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
  • சவகர்லால் நேரு எழுதிய கிளிம்ப்சஸ் ஆப் வர்ல்ட் ஹிஸ்டரி என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

இறப்பு[தொகு]

தமது 81 ஆவது அகவையில் 3 சனவரி, 1992 அன்று இயற்கை எய்தினார்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._வி._அழகேசன்&oldid=3547092" இருந்து மீள்விக்கப்பட்டது