பிரணப் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரணப் முக்கர்ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரணப் முகர்ஜி
প্রণব মুখোপাধ্যায়
Pranab Mukherjee.jpg
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 சூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி
முன்னவர் பிரதீபா பட்டீல்
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
24 சனவரி 2009 – 26 சூன் 2012
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் மன்மோகன் சிங்
பதவியில்
சனவரி 1982 – திசம்பர் 1984
பிரதமர் இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னவர் ரா. வெங்கட்ராமன்
பின்வந்தவர் வி. பி. சிங்
வெளிவிவகாரத்துறை அமைச்சர் (இந்தியா)
பதவியில்
அக்டோபர் 24, 2006 – மே 23, 2009
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் எஸ். எம். கிருசுனா
பதவியில்
பெப்ரவரி 10, 1995 – மே 16, 1996
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
முன்னவர் தினேசு சிங்
பின்வந்தவர் சிக்கந்தர் பக்த்
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
மே 22, 2004 – அக்டோபர் 26, 2006
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
பின்வந்தவர் அ. கு. ஆன்டனி
திட்டக் குழு துணைத் தலைவர்
பதவியில்
சூன் 24, 1991 – மே 15, 1996
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
முன்னவர் மோகன் தாரியா
பின்வந்தவர் மது தண்டவதே
தலைவர், மேற்கு வங்கம் பிரதேச காங்கிரசு கமிட்டி
பதவியில்
ஆகத்து, 2000[1] – சூலை, 2010
முன்னவர் சோமந்தரா நாத் மித்ரா
பின்வந்தவர் மனாசு புனியா
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 11, 1935 (1935-12-11) (அகவை 79)
மிரதி, பீர்பம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) சுர்வா முகர்ஜி
இருப்பிடம் கொல்கத்தா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்
இணையம் ministry/dept eco affairs/dea.html Official Website

பிரணப் குமார் முகர்ஜி (வங்காளம்: প্রণব কুমার মুখার্জী, பிரணவ குமார் முகர்ஜி, பிறப்பு:திசம்பர் 11, 1935) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார். முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தை பெற்றுள்ளார்.

1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியை தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்[3].

2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராக (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

தனிவாழ்வு[தொகு]

மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் [5][6]. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்[7]. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்[8].

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. "Political Profile". பிரணப் முகர்ஜியின் தனிப்பட்ட வலைத்தளம். பார்த்த நாள் சூன் 16, 2012.
  2. http://164.100.47.132/lssnew/members/Biography.aspx?mpsno=4195
  3. http://news.vikatan.com/?nid=9451
  4. "It’s President Pranab". இந்தியன் எக்சுபிரசு (சூலை 23,2012). பார்த்த நாள் சூலை 23, 2012.
  5. http://www.breakingnewsonline.net/blog/15182-from-bangali-dada-to-president-pranab.html
  6. http://www.pranabmukherjee.in/
  7. http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4195
  8. http://www.ndtv.com/article/people/who-is-pranab-mukherjee-231318
அரசியல் பதவிகள்
முன்னர்
ரா. வெங்கட்ராமன்
இந்தியாவின் நிதியமைச்சர்
1982–1984
பின்னர்
வி. பி. சிங்
முன்னர்
மோகன் தாரியா
திட்டக் குழு துணைத் தலைவர் (இந்தியா)
1991–1996
பின்னர்
மது தண்டவதே
முன்னர்
தினேஷ் சிங்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
1995–1996
பின்னர்
அடல் பிகாரி வாச்பாய்
முன்னர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்
2004–2006
பின்னர்
ஏ. கே. ஆண்டனி
முன்னர்
ப. சிதம்பரம்
வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா)
2006–2009
பின்னர்
சோ. ம. கிருசுணா
இந்தியாவின் நிதியமைச்சர்
2009–2012
பின்னர்
மன்மோகன் சிங்
முன்னர்
பிரதிபா பாட்டில்
இந்தியக் குடியரசுத் தலைவர்
2012 முதல் பதவியில் உள்ளார்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணப்_முகர்ஜி&oldid=1773326" இருந்து மீள்விக்கப்பட்டது