தினேஷ் சிங் (உத்தரப் பிரதேச அரசியல்வாதி)
தினேஷ் சிங் | |
---|---|
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 1969-70;1993-1995 | |
தொகுதி | பிரதாப்கர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூலை 1925 கலாகங்கர், உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 30 நவம்பர் 1995 தில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தினேஷ் சிங் (Dinesh Singh) (19 சூலை 1925 – 30 நவம்பர் 1995) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்திய அரசியல் தலைவர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஏழு முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய நடுவண் அரசில் இரண்டு முறை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1]
இளமை வாழ்க்கையும், கல்வியும்
[தொகு]உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பகுதியில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கலாகங்கர் பகுதியில் உள்ள பிரபுக்கள் குடும்பத்தில், அவதேஷ் சிங் என்ற நிலக்கிழாருக்கு, 19 சூலை 1925-இல் பிறந்த தினேஷ் சிங், லக்னோவில் உள்ள கால்வின் கல்லூரியில் பயின்றவர்.[1]
அரசியல்
[தொகு]தினேஷ் சிங், இந்திய நடுவண் அரசில் 1962-66-இல் இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும், 1966 – 1967-இல் வெளியுறவுத் துறை இராஜங்க அமைச்சராகவும், 1967 -69 மற்றும் 1988- 1989-இல் வர்த்தகத் துறை அமைச்சராகவும், 1970- 1971-இல் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகவும், 1969 - 1970 மற்றும் 1993 – 1995-இல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
தினேஷ் சிங், இரண்டாவது மக்களவை (1957–62) முதல் ஐந்தாவது மக்களவை வரையும் (1971–77), பின்னர் எட்டாவது மக்களவை மற்றும் ஒன்பதாவது மக்களவைக்கும் (1984-1991) ஏழு முறை பிரதாப்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இடைப்பட்ட காலங்களில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடும்பம்
[தொகு]டெக்ரி கார்வால் பகுதியைச் சேர்ந்த நீலிமா குமாரியை 1944-இல் மணந்து கொண்ட தினேஷ் சிங்கிற்கு ஆறு மகள்களைப் பெற்றவர். இவரது ஆறாவது மகள் இரத்தினா சிங் பிரதாப்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தினேஷ் சிங் தமது எழுபதாவது அகவையில் 30 நவம்பர் 1995-இல் புதுதில்லியில் மறைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Kalakankar royal family tree பரணிடப்பட்டது 2014-09-08 at the வந்தவழி இயந்திரம்