டெக்ரி கர்வால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெக்ரி கார்வால் மாவட்டம்
टिहरी गढ़वाल
மாவட்டம்
உத்தராகண்டம் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம்
உத்தராகண்டம் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் உத்தராகண்டம்
மண்டலம் கார்வால்
தலைமையிடம் புது டெக்ரி நகரம்
பரப்பளவு
 • மொத்தம் 3
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 618
 • அடர்த்தி 170
மொழிகள்
 • அலுவல் மொழி இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம் tehri.nic.in

டெக்ரி கார்வால் மாவட்டம் (Tehri Garhwal District), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கார்வால் மண்டலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் புது டெக்ரி நகரத்தில் உள்ளது. பரப்பளவில் இம்மாவட்டம் உத்தரகாண்ட மாநிலத்தின் பெரிய மாவட்டமாகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

இம்மாவட்டம் வடக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் ருத்ரபிரயாக் மாவட்டம், தெற்கில் பௌரி கார்வால் மாவட்டம், மேற்கில் டேராடூன் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. கோதுமை, பார்லி, பருப்பு, கடுகு, நிலக்கடலை, அரிசி, எள், உளுந்தம் பருப்பு, சோயா மொச்சை, கேழ்வரகு மற்றும் ராகி இம்மாவட்டத்தின் முக்கியப் பயிர்களாகும். மேலும் பழத்தோட்டங்கள் உள்ளன.[1]

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் கான்சாலி (தலித்), தியோபிரயாகை, நரேந்தரநகர், பிரதாபநகர், டெக்ரி மற்றும் தனொல்தி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

3,642 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட டெக்ரி கார்வால் மாவட்டம் கீர்த்தி மற்றும் டெக்ரி-பிரதாப்நகர் என இரண்டு வருவாய் கோட்டங்களும், தேவபிரயாகை, கன்சாலி, நரேந்திரநகர், பிரதாபநகர், டெக்ரி, தனோல்தி, கண்டிசௌர், மற்றும் நயின்பாக் என ஏழு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இம்மாவட்டம் பிலாங்கனா, சம்பா, ஜகாந்திதர், ஜௌன்பூர், கீர்த்திநகர், நரந்திரநகர், பிரதாபநகர், தேவபிரயாகை மற்றும் தௌல்தர் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், 76 ஊராட்சி மன்றங்களையும், 1,847 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் டெக்ரி மற்றும் நரேந்திரநகர் என்ற இரண்டு நகராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 618,931 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 297,986 மற்றும் பெண்கள் 320,945 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1077 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 170 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.36 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.76 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.28 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 84,657 ஆக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]