கங்கோத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கோத்திரி
கங்கோத்திரி
கங்கோத்திரி
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரகாண்ட்
மாவட்டம்உத்தரகாசி
ஏற்றம்3,415 m (11,204 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்606
மொழிகள்
 • அதிகாரபூர்வமொழிஇந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

கங்கோத்திரி (Gangotri) (இந்தி: गंगोत्री) உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்து புனிதத்தலம் ஆகும்.

கங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.

பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்ததாகவும், அதனாலேயே பாகீரதி ஆறு எனும் பெயர் உண்டானதாகவும் இதிகாச, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

புவியியல் அமைவு[தொகு]

கங்கோத்திரி 30°59′N 78°56′E / 30.98°N 78.93°E / 30.98; 78.93 இல் அமைந்துள்ளது.[1] கங்கோத்திரி கொடுமுடியில் உள்ள பசுமுகத்திலிருந்து பாகீரதி ஆறு உற்பத்தியாகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] கங்கோத்ரியின் மொத்த மக்கள் தொகை 606. இதில் ஆண்கள் 60%, பெண்கள் 40%. கங்கோத்ரியில் சராசரி எழுத்தறிவு விகிதம் 89%. இதில் ஆண்களின் விகிதம் 91%, பெண்கள் 80%. ஆறு வயதுக்குட்பட்டோரின் சதவீதம் 0%.

இதனையும் காண்க[தொகு]

நான்கு சிறு கோயில்கள்
கேதாரிநாத் பத்ரிநாத்
கங்கோத்ரி யமுனோத்திரி

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கோத்ரி&oldid=3805464" இருந்து மீள்விக்கப்பட்டது