உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரகாண்டம் மாவட்டங்கள்

உத்தராகண்டம் (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड, முன்னாளில் உத்தராஞ்சல் (Uttaranchal)), இந்தியாவின் வடபகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேராதூன் இம்மாநிலத்தின் தலைநகராகும். உத்தராகண்டம் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளன.

மாவட்டங்கள்[தொகு]

உத்தராகண்டம் மாநிலத்தின் 13 மாவட்டங்கள்:

  • சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும்,
  • அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.[1]


குறியீடு மாவட்டம் தலைநகர் மக்கட்தொகை பரப்பளவு (கிமீ²) மக்கள் அடர்த்தி(/கிமீ²) வரைபடம்
UT உத்தரகாசி உத்தரகாசி 3,29,686 8016 41 Uttarkashi in Uttarakhand (India).svg
CL சமோலி சமோலி கோபீஷ்வர் 3,91,114 8,032 51 Chamoli in Uttarakhand (India).svg
RP ருத்ரபிரயாக் ருத்ரபிரயாக் 2,36,857 1,890 125 Rudraprayag in Uttarakhand (India).svg
TG டெக்ரி கர்வால் புது தெஹ்ரி 6,16,409 4,080 151 Tehri Garhwal in Uttarakhand (India).svg
DD டேராடூன் தேராதூன் 16,95,860 3,088 550 Dehradun in Uttarakhand (India).svg
PG பௌரி கர்வால் பௌரி 6,86,572 5,399 127 Pauri Garhwal in Uttarakhand (India).svg
PI பித்தோராகர் பித்தோராகர் 4,85,993 7,100 68 Pithoragarh in Uttarakhand (India).svg
BA பாகேஸ்வர் பாகேஷ்வர் 2,59,840 2,302 113 Bageshwar in Uttarakhand (India).svg
AL அல்மோரா அல்மோரா 6,21,972 3,083 202 Almora in Uttarakhand (India).svg
CP சம்பாவத் சம்பாவத் 2,59,315 1,781 146 Champawat in Uttarakhand (India).svg
NA நைனித்தால் நைனித்தால் 9,55,128 3,860 247 Nainital in Uttarakhand (India).svg
US உதம்சிங் நகர் ருத்ரபூர் 16,48,367 2,908 567 Udham Singh Nagar in Uttarakhand (India).svg
HA அரித்துவார் அரித்துவார் 19,27,029 2,360 817 Haridwar in Uttarakhand (India).svg


மேற்கோள்கள்[தொகு]

  1. District Administration